நம்பர் நடிகை மட்டுமின்றி அந்த ஹீரோயினும் மாஸ் நடிகர் மேல கோபத்தில் இருக்காராம்.. அதுதான் காரணமா?
சென்னை: மாஸ் நடிகர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் துள்ளிக் குதித்து ஓகே சொன்ன அந்த இளம் நடிகையும் மனதளவில் ரொம்பவே அப்செட் ஆகி இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
சின்ன நம்பர் நடிகைக்கு படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காத நிலையில், நடிகை இந்த படத்தை பற்றி பெரிதும் கண்டு கொள்ளாமல் விட்டு இருப்பதாக கூறுகின்றனர். மேலும், சில பல பிரச்சனைகள் நடிகருக்கும் நடிகைக்கும் இடையே ஓடிக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு இளம் நடிகை தேவையில்லாமல் அந்த இயக்குநருக்கு ஜோடியாக நடித்த நிலையில், அவரது மார்க்கெட் ஒட்டுமொத்தமாக சரிந்து விட்டதால் அவதிப்பட்டு வருகிறாராம்.
ஆசை ஆசையாக: நடிகர் இரட்டை வேடங்களில் நடிக்க போவதாகவும் அவரது இன்னொரு லுக்கிற்கு தான் நாம் ஜோடியாகப் போகிறோம் என்றெல்லாம் ஆசைப்பட்டு அந்த நடிகை மாஸ் நடிகர் படத்தில் கமிட் ஆன நிலையில், வயதான இயக்குநருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என இயக்குநர் சொன்னதுமே அப்செட் ஆகி விட்டாராம். ஆனால், கைவசம் எந்தவொரு படமும் இல்லாத நிலையில், பெரிய சம்பளம் கிடைக்கிறதே என்பதை நினைத்து ஓகே சொல்லி விட்டாராம்.
வயதானவருக்கு ஜோடி: ஹீரோவுக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைக்கும் என ஓடோடி வந்த நடிகைக்கு நீயெல்லாம் அதுக்கு செட்டாக மாட்ட என வயதான இயக்குநருக்கு ஜோடியாக்கிய நிலையில், தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் மொத்தமாக குறைந்து விட்டதாகவும் இளம் நடிகர்கள் இனிமேல் அந்த நடிகையை சீண்ட மாட்டார்கள் என பேச்சுக்கள் தற்போது பரவலாக கிளம்பி உள்ளது.
பேராசை பெருநஷ்டம்: அப்பா இயக்கத்தில் அந்த பழைய ஸ்டார் மகன் நடித்து வரும் படத்தில் ஹீரோயினாக அந்த நடிகை நடித்திருந்த நிலையில், பல ஆண்டுகளாக அந்த படம் வெளியாகவில்லை. அதன் காரணமாக தானாக வந்து தலையை கொடுத்த நடிகையை அந்த இயக்குநர் வழக்கம் போல தலையை சீவுவது போல ஆப்பு வைத்து விட்டார். பேராசை பெருநஷ்டம் ஆகிவிட்டதே என நடிகை தற்போது கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











