அதெப்படி திமிங்கலம்.. 8 படம் வரிசையா ஃப்ளாப்.. ஆனாலும், ஒல்லி நடிகைக்கு எங்கேயோ மச்சம் இருக்கு?

By Staff

சென்னை: பொதுவா ஒரு சில படங்கள் ஃபிளாப் ஆனாலே ஹீரோயின்களை ராசியில்லாத நடிகை என ஓரங்கட்டி விடுவார்கள். ஆனால், ஹீரோக்கள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தினாலும் அவர்களின் கேம் ஓவர் ஆகாமல் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களை அவர்களுக்கு தூக்கிக் கொடுப்பார்கள்.

அப்படி ஹீரோக்களுக்கு கிடைத்து வரும் சலுகை போல ஒல்லி நடிகை ஒருவருக்கு கிடைத்து வருகிறதே எப்படி என்கிற கேள்விகளை சினிமா வட்டாரத்தில் சிலர் கிளப்ப, நடிகை பார்த்து வரும் ஒரு வேலை தான் அதற்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Young Heroine gains more films after 8 consecutive flops shocks cinema industry
Photo Credit:

ஹீரோக்களின் ஃபேவரைட்டாக நடிகை வலம் வருவதால் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வந்தாலும் அவர் காட்டில் மழை என்கின்றனர்.

தொடர்ந்து 8 தோல்வி: சமீபத்தில் பிரபலமான இளம் நடிகை சிறு வயது முதலே நடித்து வருகிறார். ஒல்லியான தேகத்துடன் அட்டகாசமாக ஆடி வரும் அந்த நடிகையை டாப் ஹீரோக்கள் முதல் யங் ஹீரோக்கள் வரை புக் செய்த க்யூவில் காத்திருக்கின்றனர் என்று கூறுகின்றனர். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும் லேடி லெக் தாதா போல அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் பல்பு வாங்கி வருகிறது. இதுவரை தொடர்ந்து அவர் நடித்த 8 படங்கள் ஃப்ளாப் என்கிற புள்ளி விவரம் தான் ஒட்டுமொத்த திரையுலகத்தையே ஷாக் ஆக்கியுள்ளது.

பாலிவுட் வரை கிராக்கி ஜாஸ்தி: ஆனால், நடிகையின் மார்க்கெட்டோ, சம்பளமோ, பட வாய்ப்புகளோ எதுவுமே குறையவில்லை என்பது தான் இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் என்று சினிமா வட்டாரமே அந்த நடிகை பற்றி பேசி வருகிறது. இந்த நடிகைக்கு சீனியர் நடிகைகளும், இவருக்கு அடுத்து வந்த ஜூனியர் நடிகைகளும் ஒரு படத்தை புக் செய்யவே நாக்கு தள்ளி வரும் நிலையில், ஒல்லி நடிகை ஓடோடி சென்று 4 படங்களை கைவசம் வைத்துள்ளார் என்கின்றனர்.

பிரைவேட் பார்ட்டி தான் காரணமாம்: இந்த நடிகைக்கு முன்பாக அந்த ஓவர் ஆக்டிங் நடிகை திடீரென பான் இந்தியா குயினாக மாற காரணமே அவர் அடிக்கடி வைக்கும் பிரைவேட் பார்ட்டி தான் என்பதை அவருடன் இருந்து நன்கு புரிந்துக் கொண்ட இந்த ஒல்லி நடிகையும் ஷார்ப்பாக ஹீரோக்களை மட்டும் அழைத்து சில பிரைவேட் பார்ட்டிகளை வைத்து அடுத்தடுத்த படங்களை புக் செய்து விடுகிறார் என்கின்றனர். ஆனால், இப்படியே இந்த வண்டி ரொம்ப நாள் தாண்டுவது கஷ்டம் தான் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X