தயாரிப்பாளர் பர்ஸில் பெரிய்ய்ய ஓட்டை போட்ட இளம் நடிகை
சென்னை: பெயரில் நேசத்தை வைத்துள்ள அந்த இளம் நடிகை தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தி புலம்பவிடுகிறாராம்.
பெயரில் நேசத்தை வைத்துள்ள அந்த இளம் நடிகை தவறான காரணங்களுக்காக செய்திகளில் வருகிறார். அவர் இரண்டு இளம் ஹீரோக்களை தனது அன்பு பிடியில் வைத்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.
அம்மணி வளர்ந்து வரும் ஹீரோக்களுடன், சிறிய பட்ஜெட் படங்களில் தான் நடித்து வருகிறார். அவர் தமிழ் பெண் என்றாலும் கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அவரோ தான் நடிப்பது சிறிய பட்ஜெட் படங்கள் என்று தெரிந்தும் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு வைத்துவிடுகிறாராம்.
அவர் நடித்து வரும் அரசர் படத்தில் தயாரிப்பாளருக்கு கூடுதலாக ரூ.1 கோடி செலவு வைத்துவிட்டாராம். அவர் இதே போன்று தொடர்ந்து நடந்து கொண்டால் கோடம்பாக்கத்தில் இருப்பது கஷ்டம் தான் என்று கூறப்படுகிறது.
அந்த நடிகையின் நடிப்பில் அண்மையில் வெளியான விலங்கின் பெயர் கொண்ட படம் ஓடாததால் கவலையில் உள்ளாராம்.


Click it and Unblock the Notifications










