»   »  கொள்கையை தளர்த்தி, அடுத்தவர் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் வாரிசு நடிகை

கொள்கையை தளர்த்தி, அடுத்தவர் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் வாரிசு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் முதலிடத்தை பிடிக்க வாரிசு நடிகை கொள்கையை தளர்த்தியதுடன், அடுத்தவரின் வாய்ப்பையும் தட்டிப் பறிக்கிறாராம்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் வாரிசு நடிகை. பெரிய நம்பர் நடிகையின் இடத்தை பிடிப்பதையே குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் ரொம்ப சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடி சேர்வது இல்லை என்ற முடிவில் உள்ளார். ஆனால் தெலுங்கு திரையுலகில் மட்டும் சீனியர்களுக்கும் ஜோடி சேர்கிறார். காரணம் தாய்க்குலத்தின் அறிவுரையாம்.

டோலிவுட்டில் எப்படியும் முதலிடத்தை பிடித்துவிட வேண்டும் என தாய்க்குலம் கூறியுள்ளாராம். கொள்கையை தளர்த்திய வாரிசு நடிகை தற்போது மேலும் ஒரு விஷயமும் செய்துள்ளாராம்.

தெலுங்கில் பெரிய ஹீரோ ஒருவருடன் பெரிய இடத்து வாரிசு நடிகை நடிக்கவிருந்த பட வாய்ப்பை அம்மணி தட்டிப்பறித்துவிட்டாராம். இது எல்லாம் எங்க போய் முடியப் போகிறதோ!

English summary
A young actress who has relaxed some policy in Tollywood has reportedly snatched somebody's opportunity.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil