ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்.. வாலிப ஹீரோயினின் வித்தியாசமான டீல்!
சென்னை: செம ஹாட்டாக போட்டோக்களை பதிவிட்டு இளைஞர்களை இணையத்தில் சூடாக்கி வருகிறார் அந்த வாலிப ஹீரோயின்.
ஏகப்பட்ட இளம் நடிகைகள் சினிமா வாய்ப்புக்கு போட்டா போட்டி போட்டு வருவதால் பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளவும் தயாரிப்பாளர்களை தன் பக்கம் ஈர்க்கவும் சூப்பர் டீல் ஒன்றை போட்டிருக்கிறாராம் அந்த இளம் கவர்ச்சி நடிகை.
அப்படி அது என்ன டீல் என்று விசாரித்துப் பார்த்தால், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என பலே மார்க்கெட்டிங் செய்து வருகிறாராம்.

வாலிப ஹீரோயின்
இசை நடிகர் நடிப்பில் வெளியான அந்த வாலிப படத்தில் அறிமுகமானவர் தான் அந்த இளம் நடிகை. பேக்ரவுண்ட் ரொம்ப பெருசு என்பதால் பட வாய்ப்புகள் வரிசை கட்டி குவிந்து வருகிறதாம். கிளாமர் போட்டோக்களை போட்டாலே போதும் நடிப்பை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை என நினைக்கும் ஏகப்பட்ட இளம் இன்ஸ்டாகிராம் நடிகைகள் இவருக்கு போட்டியாக களம் இறங்கி உள்ளனர்.

கவர்ச்சி ரூட்
சினிமாவை பொறுத்தவரையில் ஷார்ட் பிலிமில் நடித்திருக்கும் அனுபவம் கூட நடிகைகளுக்கு தேவையில்லை என்கிற நிலை இன்னமும் நிலவி வருகிறது. நடிப்பாற்றல் இல்லை என்றாலும், கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்தால் போதும் அரை டஜன் படங்கள் அடுத்த நொடியே வந்து விழுந்து விடுகின்றன. ஆனால், வாலிப ஹீரோயினுக்கு கவர்ச்சியை தாண்டிய நடிப்பும் இருப்பதால் சரியாக திட்டமிட்டு வாய்ப்புகளை தன் பக்கம் வரவழைத்து வருவதில் பலே கில்லாடியாக உள்ளாராம்.

வந்தவுடனே விருது
முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி செம ஸ்கோர் செய்த அந்த நடிகைக்கு அறிமுக நடிகை விருதுகளும் குவிந்து வருகின்றன. கோலிவுட்டில் நல்லா கல்லா கட்டலாம் என சும்மா அமைதியாக இருந்து விடாமல் மாஸ்டர் பிளான் போட்டும் மற்ற நடிகைகளின் அசைவுகளை கவனித்தும் வருகிறாராம்.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
அந்த தனியார் டிவியில் இருந்து ஏகப்பட்ட நடிகைகள் கோடம்பாக்கம் பக்கம் குவிந்து வரும் நிலையில், அவர்களை விடவும் தான் கெட்டிக்காரியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் வாலிப நடிகை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்கிற புது ரூட்டை ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அப்படி என்ன டீல்
தன்னை ஒரு படத்தில் புக் செய்யும் தயாரிப்பாளர்களுக்கு அடுத்த படத்தை பாதி சம்பளத்தில் நடித்துக் கொடுக்க சம்மதம் என அதிரடியாக சொல்லி இருப்பதுதான் அவர் பக்கம் திடீரென காத்து வீசக் காரணம் என்கின்றனர். ஒரு படம் ஹிட் ஆனதும் அடுத்த படத்திற்கு சம்பளத்தை பல கோடிகளுக்கு உயர்த்தும் நடிகைகளுக்கு நடுவே இப்படி ஒரு நடிகை சொன்னால் தயாரிப்பாளர்கள் சும்மா விடுவார்களா?

இந்த முடிவு ஏன்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது தான் நடிகைகளை பொறுத்தவரையில் சினிமாவில் சொல்லப்படும் தாரக மந்திரமாக உள்ள நிலையில், இந்த நடிகை ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின் தி ரேஸ் எனும் முயல் - ஆமை கதை ஸ்டைலில் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்பது தான் டார்கெட்டாம். பணம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லையாம். நிறைய படங்கள் கிடைத்தால், ஆட்டோமேடிக்காக நிறைய சம்பளம் வரத்தானே செய்யும் என்றும் ஒரு கட்டத்திற்கு மேல் உயர்ந்தால் தயாரிப்பாளர்களே சம்பளத்தை ஏற்ற போகிறார்கள் நாம் ஏன் அதை பெரிய விசயமாக கருத வேண்டும் என சூப்பர் முடிவு எடுத்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











