ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கிறாரா அந்த இளம் நடிகர்? திடீரென அந்த இயக்குநர் இப்படி புலம்புறாரே?

By Staff

சென்னை: இளம் மாஸ் நடிகராக கலக்கி வரும் அந்த சின்னத்திரை டு சினிமா பிரபலம் தொடர்ந்து ஏற்றி விடும் ஏணிகளை எல்லாம் எட்டி உதைப்பதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.

இளம் ஹீரோவுக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்த அந்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அவரிடம் இயக்குநர் வைத்த கோரிக்கையை நிராகரித்து விட்டாராம் அந்த நடிகர்.

படம் ஃபிளாப் ஆனதில் இருந்தே இருவருக்கும் இடையே பிரச்சனை ஆரம்பமானது என்றும் பேசிக் கொள்கின்றனர்.

இளம் மாஸ் ஹீரோ

இளம் மாஸ் ஹீரோ

சின்னத்திரையில் இருந்து இவரும் சினிமாவுக்கு வந்து கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். முன்னணி ஹீரோவாக மாறிய இவர் சினிமாவில் பல பிசினஸ்களை கவனித்துக் கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கொடுத்து வரும் நிலையில் திரையுலகம் இவரை கொண்டாடி வருகிறது.

ஏணிகளை எட்டி உதைத்து

ஏணிகளை எட்டி உதைத்து

பொதுவாக சினிமாவில் இந்த பிரச்சனை சர்வ சாதாரண ஒன்றாகத் தான் இதுவரை பார்க்கப்பட்டு வருகிறது. ஏற்றிவிடும் ஏணிகளை உச்சத்துக்கு சென்ற பின்னர் எளிதாக எட்டி உதைத்து தள்ளிவிடும் வழக்கத்தை இந்த இளம் மாஸ் நடிகரும் பழக்கமாக கொண்டு இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணமே உள்ளன.

ஒல்லி நடிகருடன் பஞ்சாயத்து

ஒல்லி நடிகருடன் பஞ்சாயத்து

சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருந்த இவரை சினிமாவுக்கு அழைத்து வந்து அழகு பார்த்த அந்த ஒல்லி நடிகருடன் ஆரம்பத்திலேயே பஞ்சாயத்து பண்ணி விட்டு சுதந்திர பறவையாக வெளியேறினார் அந்த இளம் ஹீரோ. ஒல்லி நடிகருடன் மட்டுமின்றி பல தயாரிப்பாளர்களிடமும் சண்டை தானாம்.

தனியாக தயாரிப்பு

தனியாக தயாரிப்பு

தயாரிப்பாளர்கள் தான் கேட்கும் சம்பளத்தை தர மறுக்கின்றனர் என்றும், தனது நடிப்பால் படம் நல்லா ஓடும் போது கேட்கும் சம்பளத்தை தர மறுக்கின்றனர் என்கிற பிரச்சனையை கிளப்பி தனியாக சொந்த தயாரிப்பையே தொடங்கினார். ஆனால், தொடர்ந்து பல படங்கள் பல்பு வாங்கிய நிலையில், ஏகப்பட்ட கடனில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் கசிந்து அவரது நிலைமையை கோடம்பாக்கத்துக்கு உணர்த்தியது.

இரண்டாம் பாகம் பிரச்சனை

இரண்டாம் பாகம் பிரச்சனை

இந்நிலையில், மாஸ் நடிகர் நடிப்பில் பெரும் வெற்றியை பெற்ற அந்த இரண்டாம் பாகத்தில் மீண்டும் அவரை நடிக்க வைக்க இயக்குநர் அணுகிய நிலையில், ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான அந்த பெரிய படம் படு தோல்வி அடைந்ததும் உங்க சங்காத்தமே வேண்டாம் என ஒதுங்கிய நடிகர் இயக்குநரின் இரண்டாம் பாக கோரிக்கையை அதிரடியாக மறுத்து விட்டாராம்.

புது முகம்

புது முகம்

நடிகருடன் நடந்த பிரச்சனையை வெளியே சொல்லிக் கொள்ள விரும்பாத அந்த இயக்குநர் புதிய நடிகருடன் அந்த இரண்டாம் பாகத்தை தொடங்கப் போவதாக கூறி வருகிறார். இளம் மாஸ் ஹீரோவை தவிர வேறு யார் நடித்தாலும் அந்த படம் நல்லா இருக்காது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X