கிடைச்ச கேப்புல சிக்ஸர் அடிக்கும் இளம் மாஸ் ஹீரோ.. உச்ச நடிகரின் வாரிசாக மாஸ் பிளான் போடுகிறாராம்?
சென்னை: இதுவரை தனது வாரிசாக மருமகனை நினைத்து வந்த அந்த உச்ச நடிகரின் கனவை எல்லாம் அந்த ஒல்லி நடிகர் சுக்கு நூறாக உடைத்து விட்ட நிலையில், கிடைச்ச கேப்புல இளம் மாஸ் ஹீரோ உள்ளே நுழைந்து விட்டாராம்.
ஒரு பொண்ணுக்குத் தான் அப்படி நடந்தது, இன்னொரு பொண்ணை கண் கலங்காமல் பார்த்துக் கொள்கிறார் என சகல வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வந்த நிலையில், சமீபத்தில் நடந்த விவகாரம் உச்சத்தை ரொம்பவே உடைத்து விட்டதாம்.
அதே நேரத்தில் அவரது ஆசிர்வாதங்களை அப்படியே ஆட்டையை போடும் முயற்சியில் இளம் மாஸ் ஹீரோ தீவிரம் காட்டி வருகிறார் என பரபரப்பான பேச்சுக்கள் எழுந்துள்ளன.

ஐஸ் ஃபேக்டரியே
சாதாரணமாக முன்னணி நடிகர்களுக்கு வளர்ந்து வரும் நடிகர்கள் ஏதாவது ஒரு காட்சியில் அவரது ரெஃபரன்ஸை வைத்து ஐஸ் வைப்பார்கள். ஆனால், சமீபத்தில் இளம் மாஸ் ஹீரோ நடித்த படத்தில் ஐஸ் என்னங்க ஐஸ்.. நான் ஐஸ் ஃபேக்டரியே வைக்கிறேன்னு ஏகப்பட்ட காட்சிகளை தூக்கி வைத்ததில் உச்ச நடிகர் ரொம்பவே உருகி போய் விட்டாராம்.

அவரு வொர்க்கவுட் ஆகல
முன்னதாக டாப் நடிகரை தனது படத்துக்கு முட்டுக் கொடுக்க இளம் மாஸ் நடிகர் பயன்படுத்தி வந்த நிலையில், அந்த படங்கள் எல்லாம் படு ஃபிளாப் ஆனதும், அவரு வேண்டாம் வொர்க்கவுட் ஆகல என உச்ச நடிகர் பக்கம் நைஸாக இணைய பக்கா பிளான் போட்டு விட்டாராம் அந்த இளம் மாஸ் ஹீரோ.

கிடைச்ச கேப்பில்
இதுவரை உச்ச நடிகரின் வாரிசாக மருமகன் இருந்து வந்த நிலையில், தற்போது கதையே மாறி விட்டதாம். இளம் மாஸ் ஹீரோவுக்கு தனது படத்தின் தலைப்பையே வைத்துக் கொள்ள ஓகே சொல்லி விட்டாராம் உச்ச நடிகர். கிடைச்ச கேப்பில் சரியாக காய்களை நகர்த்தி அவரது இதயத்திலேயே பெரிய இடத்தை பிடித்து விட்டாராம்.

இருவரும் இணைந்து
கோலிவுட்டின் எதிர்காலமே அவர் கைகளில் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட உச்ச நட்சத்திரமும் தனது அடுத்த படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் அனுமதி கொடுத்து விட்டாராம். இதுமட்டுமின்றி ஏகப்பட்ட ஜாக்பாட் கதவுகளையும் தற்போது இளம் மாஸ் ஹீரோவுக்காக உச்ச நடிகர் திறந்து விட்டது தான் அவரது திடீர் வளர்ச்சிக்கே காரணம் என்கின்றனர்.

பெரிய பட்ஜெட்
மேலும், அடுத்ததாக ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இந்த குதிரை இன்னமும் அதிகம் பந்தயம் அடிக்கும், ஒரு பெரிய பட்ஜெட்டில் நம்பி படம் பண்ணுங்க, மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வரும் என்றும் சொல்லியிருக்காராம். நூறு கோடிக்கும் அதிகமாக படமே தயாராக போவதாகவும் பரபரப்பு தகவல்கள் கசிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











