அந்த பாக்கியமே உனக்கு இல்லை.. யங் ஹீரோயினை தூக்கியடித்த தயாரிப்பாளர்கள்.. அவர் மேல என்ன தப்பு?

By Staff

சென்னை: இளம் நடிகை நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில், புதிதாக அந்த நடிகையா அய்யோ வேண்டாம் என சில தயாரிப்பாளர்கள் கையெடுத்துக் கும்பிடு போட்டு வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

தனித்துவமாக இல்லாமல் யாரையோ பார்த்த உணர்வுடனே அந்த நடிகையின் முகம் இருந்தாலும், உடல் முழுக்க திறமை கொட்டிக் கிடக்கும் நிலையில், சில இயக்குநர்கள் அந்த நடிகை தான் நல்லா நடிக்கிறாங்க, அழகா இருக்காங்க என அடம் பிடித்து தங்கள் படங்களில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தனர்.

Young Powerful Actress loses many new movies due to her continuous flops

ஆனால், நடிகையின் நடிப்பைத் தாண்டி படத்தில் வேறு எந்த நல்ல விஷயமும் இல்லாத நிலையில், படங்கள் தோல்வியைத் தழுவின. ஆனால், தற்போது அதற்கு நடிகை தான் காரணம் என ராசியில்லாத நடிகை என்கிற பட்டத்தை தயாரிப்பாளர்கள் அந்த நடிகைக்கு சூட்டியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

வெற்றிப் பெறவில்லை என்றால்: என்னதான் சினிமாவில் சிறந்த நடிகர்களாக இருந்தாலும், அவர்கள் நடிக்கும் படங்கள் வெற்றிப் பெறவில்லை என்றால், அவர்களை சினிமா உலகில் இருப்பவர்களே முன்னாடி ஒரு மாதிரியும் பின்னாடி வேறமாதிரியும் தான் பேசுவார்கள். சில தயாரிப்பாளர்கள் நடிகர்கள் முகத்துக்கு எதிராகவே உனக்கு மார்க்கெட்டே இல்லை; வேற வேலை போய் பாரு என சொல்லிவிடும் கதைகளும் இங்கே பல அரங்கேறியுள்ளன.

அந்த பாக்கியம் உனக்கு இல்லை: எப்படியாவது சினிமாவில் வெற்றிப் பெற்று விட வேண்டும் என சில தோல்விகளை சந்தித்த நிலையில், கிடைத்த பெரிய வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி உயிரைக் கொடுத்து நடித்துக் கொடுத்து திருப்தியுடன் கண்டிப்பாக இந்த முறை தனக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கிடைக்கும் என கனவு கண்டு கொண்டிருந்த நடிகைக்கு உனக்கு அந்த பாக்கியமே கிடையாது என அந்த படம் கைவிட்ட நிலையில், ரொம்பவே கண்கலங்கி அழுதுவிட்டார் என்கின்றனர்.

தூக்கிப் போட்ட தயாரிப்பாளர்கள்: இந்த படத்துக்குப் பிறகு கண்டிப்பாக சினிமா உலகமே தனது வீட்டு வாசலில் லைன் கட்டி வந்து அட்வான்ஸ் தொகையை அள்ளிக் கொடுத்து சம்பளத்தை உச்சத்துக்கு ஏற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக ராசியில்லாத நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் தற்போது யங் ஹீரோயினின் பெயரை எழுதி தூக்கியடித்து விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X