அப்போ அந்த ‘எஸ்’.. இப்போ இந்த ‘எஸ்’.. விவாகரத்து நடிகருடன் திடீர் நெருக்கம்.. இதுதான் காரணமா?
சென்னை: மனைவியை பிரிந்தாலும், படு ஜாலியான வாழ்க்கையை அந்த பிரபல நடிகர் வாழ்ந்து வருகிறார் என்கின்றனர்.
ஏற்கனவே அந்த நடிகர் பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், விவவரங்களும் வெளியான நிலையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் மனுஷன் ஜாலியாக இருக்கிறாராம்.
நடிகரை விடாமல் அந்த இளம் நடிகை தான் தற்போது அவரை துரத்தி துரத்தி வருவதாகவும், அதற்கு அப்படியொரு காரணம் இருப்பதாகவும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

சேட்டைக்காரர்
குறும்புத்தனமாகவும் எதார்த்தமாகவும் பேசி தன்னுடம் இருப்பவர்களை எப்போதுமே சந்தோஷமாக வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர் அந்த பிரபல நடிகர். அவர் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகளை பார்த்தெ பலரும் அவர் வசப்பட்டு விடுவார்கள் என்கிற பேச்சுக்கள் பல காலமாகவே திரைத்துறையில் உள்ள நிலையில், பக்கத்து ஸ்டேட் இளம் நடிகைகளும் தற்போது நடிகரின் வசம் நெருக்கம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.

படம் முடிஞ்சுடுச்சே
சமீப காலமாக 'எஸ்' நடிகை ஒருவர் நடிகரை சுற்றி சுற்றி வருவதும், இவரும் அவருக்காவே அடிக்கடி விமானத்தில் பறப்பதுமாக இருந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இருவரும் இணைந்து நடித்த அந்த படம் தான் முடிந்து விட்டதே, இதற்கு மேல் அவர்களுக்கு இடையே என்ன? விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது, ஏன் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர் என்கிற கேள்விகள் இண்டஸ்ட்ரியில் பரவலாக எழுந்துள்ளது.

நல்ல நட்பு
நடிகர் மனைவியை பிரிந்த நிலையில், அந்த நடிகைக்கும் நடிகருக்கும் இடையே நட்பு அதிகரித்துள்ளதாகவும், அதன் காரணமாகத்தான் இருவரும் அடிக்கடி ஒன்றாக சந்தித்து மனம் விட்டு பேசி வருகின்றனர் எனக் கூறுகின்றனர். ஆனால், அந்த நடிகை அந்த நடிகருடன் திடீரென இப்படி பாசம் வைப்பதற்கு பின்னணியில் வேறு ஒரு பக்கா பிளானும் இருக்கிறது என்கிற பேச்சு தற்போது பலமாக அடிபடத் தொடங்கி உள்ளது.

அந்த ஆசை
தனது எல்லையை தாண்டி வெளிநாட்டு படங்களில் நடிகர் நடித்து அசத்தி வரும் நிலையில், அதே போன்ற ஆசைகள் அந்த இளம் நடிகைக்கும் இருப்பது தான் இந்த திடீர் நெருக்கத்திற்கும் நட்புக்கும் காரணம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடிகரும் சில வாய்ப்புகளை நடிகைக்கு ஏற்படுத்தித் தருவதாக வாக்கு கொடுத்து இருக்கிறாராம்.

ஒரே எஸ்ஸா இருக்கே
ஏற்கனவே மனைவி மூலமாக அறிமுகமான எஸ் நடிகை உடன் நடிகர் படு நெருக்கம் காட்டிய நிலையில், தற்போதும் ஒரு எஸ் நடிகையுடன் நெருக்கம் காட்டுகிறாரே, இதன் காரணமாகத்தான் இருவரும் பிரிந்தனரா? போன்ற கேள்விகளையும் எழுப்பி கோடம்பாக்கத்தில் பல வித பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. கூடிய விரைவில் என்ன மேட்டர் என்பது தெளிவாக வெளியே வந்து விடும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











