புத்தாண்டு பார்ட்டி.. பதம் பார்க்க முயன்ற நடிகர்.. வெளுத்துவிட்ட நடிகை.. வருட ஆரம்பமே அசிங்கம்

By Staff

சென்னை: கோலிவுட்டில் வளரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அவர். திறமை எக்கச்சக்கமாக கொண்டிருக்கும் அவர்; விரைவில் பெரிய ஆளாக வருவார் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் 2026 புத்தாண்டு பார்ட்டியை நேற்று கொண்டாடியபோது; நடிகை ஒருவரை அவர் பதம் பார்க்க முயன்றதாகவும்; உஷாரான நடிகை அனைவரது முன்னிலையிலும் அந்த நடிகரை வெளுத்துவிட்டதாகவும் பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன.

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் பிரகாசிப்பவராக இருக்கிறார் அந்த நடிகர். வரிசையாக ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி மார்க்கெட்டையும் உருவாக்கி வைத்துவிட்டார். சம்பளத்தையும் எக்குத்தப்பாக உயர்த்தியிருக்கிறாராம். இதன் காரணமாக இனி வரும் காலங்களில் கண்டிப்பாக அந்த நடிகர் கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அவரும் அதற்கேற்றபடி முழு உழைப்பையும் ஒவ்வொரு படத்திலும் போட்டுவருகிறார்.

உயர்ந்த ரசிகர் பட்டாளம்: கடந்த வருடம் அந்த நடிகருக்கு மறக்க முடியாத வருடம். பெரிய ஹீரோக்களே ஒரு ஹிட் கொடுப்பதற்கு தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியதாகிவிட்டது. ஆனால் இவரோ அசால்ட்டாக ஹிட் மேல் ஹிட்டாக கொடுத்துவிட்டார். அதனைப் பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சரியத்தில் வாயடைத்து போனது என்றுதான் சொல்ல வேண்டும். வரிசையான ஹிட்டுகள் காரணமாக அவருக்கென்று ரசிகர் பட்டாளமும் அதிகரித்துவிட்டது.

Young Rising Tamil Actor Allegedly Misbehaves at New Year Party Actress Slaps Him in Public

அப்படி இப்படித்தான்: ஹீரோவாக வென்றுவிட்ட அவருக்கு எக்கச்சக்க திறமை இருக்கிறது. திறமை அதிகம் இருக்கும் அதேசமயம் சில விஷயங்களில் அவர் அப்படி இப்படி இருக்கிறாராம். தொடர்ந்து கிடைத்த வெற்றி போதை அவருக்குள் தேவையில்லாத விஷயங்கள் சம்பந்தமாக வெறி ஏற்ற; நடிகர் வேறு ரூட்டில் பயணிக்க தொடங்கிவிட்டாராம். அதில் முக்கியமான ஒன்று மாதுக்கள். மது அருந்திவிட்டு மாதுவை சுவைப்பதுதான் அவரது மெயின் பொழுதுபோக்காக மாறியிருக்கிறதாம்.

புத்தாண்டு பார்ட்டி: சாதாரண நாட்களிலேயே தனது வீட்டிலோ அல்லது ஏதேனும் ஒரு பப்பிலோ பார்ட்டியில் இருக்கும் அவர்; புத்தாண்டுக்கு முதல் நாள் சொல்லவா வேண்டும். அதேமாதிரிதான் 2025ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று தனது டீமுடன் பார்ட்டி செய்தாராம். அந்தப் பார்ட்டிக்கு வளரும் நடிகைக்கும் அழைப்பு சென்றதாம். ஒன்றும் ஆகாது பார்ட்டிதானே என்று நம்பி அந்த டீமுடன் சேர்ந்திருக்கிறார் அம்மணி. ஆரம்பத்தில் எல்லாமே சுமூகமாக போயிருக்கிறது.

பதம் பார்க்க முயன்ற நடிகர்; வெளுத்த நடிகை?: நேரம் ஆக ஆக எல்லோருக்கும் போதை தலைக்கேறி இருக்கிறது. நடிகரோ கணக்கு வழக்கே இல்லாமல் மது மற்றும் இதர போதை வஸ்துக்களை பயன்படுத்த; நடிகையை பார்த்து டெம்ப்ட் ஆகிவிட்டாராம். எல்லோரும் பார்ட்டியில் பிஸியாக இருக்க; நடிகையிடம் சென்று சின்ன சின்ன சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். முதலில் போதையில் தெரியாமல் செய்கிறார் என்று நினைத்த நடிகைக்கு; போகப்போகத்தான் வேண்டுமென்றே செய்கிறார் என்று புரிந்ததாம்.

டீசன்ட்டாக விலகி விலகி சென்ற அவரிடம்; ஒருகட்டத்தில் தவறாக நடந்துகொள்ள ஆரம்பித்தாராம். இதனை எதிர்பார்க்காத நடிகை உச்சக்கட்ட கோபமாகி; அந்த இடத்திலேயே பளார் பளார் என்று அறைந்துவிட்டாராம். அறைந்தது மட்டுமின்றி சகட்டுமேனிக்கு திட்டுக்களும் விழுந்திருக்கின்றன. இதனை பார்த்து பார்ட்டியில் இருந்த மற்றவர்கள்; அந்த நடிகையை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்களாம். இந்த வருடம் இப்படி அசிங்கமாக ஆரம்பித்துவிட்டதே என்று ரொம்பவே நொந்துபோயிருக்கிறாராம் நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X