லட்சக்கணக்குல EMI.. பட வாய்ப்பு கிடைக்கும்னு நம்பி பந்தா பண்ண சீரியல் நடிகை.. சிக்கித் தவிக்கிறாராம்
சென்னை: லட்டு போல இருக்கும் நடிகை சினிமாவில் வாய்ப்பு கிடைத்த உடனே பெரிய ஸ்டார் ஆகிவிடுவோம் என ஏகப்பட்ட கனவுகளுடன் கார், வீட்டுக்குத் தேவையான சொகுசு ஜாமான்கள், புது ஃபிளாட் என கண்ட இடத்துல இஎம்ஐ வாய் வைத்த நிலையில், நடிகைக்கு சுட்டுப் போட்டாலும் நடிக்கவே வரவில்லை என இயக்குநர்கள் அதிரடியாக ஓரங்கட்ட நடிகை தற்போது கடனில் தத்தளித்து வருகிறாராம்.
மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்து ஹை கிளாஸ் வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுக் கொண்டிருந்த அந்த சீரியல் நடிகை சரசரவென உயரப் போகிறோம் என நினைத்து அகல கால் வைத்ததன் விளைவு தற்போது பரமபத விளையாட்டில் ஆதிசேஷன் பாம்பு கொத்தி அதள பாதாளத்தில் வந்து விழுந்ததை போல சறுக்கி விழுந்து சங்கடத்தில் ஆழ்ந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரவு எட்டணாவாக இருந்தால் செலவு பத்தணாவாக பண்ணி அந்தோ பரிதாபம் என நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நடிகை தனது நண்பர்களுடனும் தெரிந்த நடிகர்களுடனும் எப்படியாவது ஒரு படத்திலாவது நடிக்க சான்ஸ் கொடுங்க என்றும் லோ லோவென அலைந்து வருவதாக கூறுகின்றனர்.
லட்டு நடிகை: சின்னத்திரையில் லட்டு போல இருந்து வந்த அந்த நடிகைக்கு திடீரென சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அடுத்த லேடி சூப்பர்ஸ்டாரே நாம தான் என்கிற ரேஞ்சில் கனவு காண ஆரம்பித்த நடிகை, கடனுக்கெல்லாம் அஞ்சாமல் தைரியமாக EMIல் ஏகப்பட்ட ஆடம்பர பொருட்களையும் அபார்ட்மென்ட்டில் ஒரு புது ஃபிளாட்டையும் புக் செய்து விட்டாராம்.
வாய்ப்பெல்லாம் வாஷ் அவுட்: ஆனால், நடிகையின் துரதிர்ஷ்டம் அவருக்கு வந்து கொண்டிருந்த வாய்ப்புகள் திடீரென அப்படியே டோட்டலாக நின்று போய் விட்டதாம். மேலும், புதிய படங்களில் உன்னை தவிர வேறு யாரு வேணா முயற்சி பண்ணலாம் என்கிற ரீதியில் நடிகையை மட்டும் திரையுலகம் திடீரென கழட்டி விட நடிகை ரொம்பவே அப்செட் ஆகி விட்டார்.
கழுத்தை நெறிக்கும் EMI: தொடர்ந்து சினிமா சான்ஸ் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில், மேக்கப்புக்கு செலவு, காஸ்மெடிக் சர்ஜரி, புது வீட்டின் லோன், சொகுசு காருக்கு லோன் என ஏகப்பட்ட ஆடம்பர செலவுகளையும் கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்தும் வங்கியில் லோன் போட்டும் வாங்கிய நிலையில், தற்போது எந்த உதவியும் இல்லாமல் நிர்கதியாக நிற்கும் நிலையில், மாசத்துக்கு 3 லட்சம் வரை EMI மட்டுமே கட்ட வேண்டிய அளவுக்கு பில் வருகிறதாம்.
அதை சமாளிக்க என்ன செய்வதென்றே தெரியாமல் முழி பிதுங்கி நிற்கும் அந்த நடிகை சில நண்பர்களிடமும் நடிகர்களிடமும் ஒரு படத்திலாவது சான்ஸ் வாங்கிக் கொடுங்க என கெஞ்சி வருகிறாராம். பணத்தை அடைக்க மேலும், சிலரிடம் கடன்களையும் ரகசியமாக வாங்கி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











