இனிமேல் அப்பா பேச்சை கேட்பதாக இல்லை.. அவர் எங்கே? அடுத்து லெப்ட்டா? ரைட்டா? நடிகர் விபரீத முடிவு

By Staff

சென்னை: இந்த நடிகர் தென்னிந்திய சினிமாவில் ஒரு ராஜா வீட்டு கன்னுக்குட்டி ஆகத்தான் காலடி எடுத்து வைத்தார். இளவரசராக படப்பிடிப்புத் தளங்களில் தாங்கோ தாங்கு என தாங்கினார்கள். ஆனால் அவருக்கு கடுமையான எதிர் விமர்சனங்கள் இருந்தது. இப்படி இருக்கையில் நடிகரின் அப்பாவோ, மகனே இதைப் பற்றி எல்லாம் நீ கவலைப் படாதே, உன்னை இந்த சினிமாவில் மார்க்கெட் உள்ள நடிகராக மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறி நம்பிக்கை எல்லாம் தெரிவித்துள்ளார்.

ஆனால் நடிகரோ நான் நடிக்கவே வேண்டாம்னு முடிவு செய்துவிட்டேன் எனக் கூற, உடனே அப்பாவோ, நடிப்பை விட்டுட்டு என்ன செய்யப் போகிறாய்? வாழ்க்கையில் நிம்மதியாக வாழ, குறைந்தபட்சம் உன்னை நீயே காப்பாற்றிக் கொள்ள முறையான படிப்பாவது இருக்கிறதா என்று கேட்டுள்ளார். இதற்குப் பின்ன மேற்கொண்டு படிப்பதற்கு பதில் நடிப்பதே மேல் என்று மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

நடிகர் ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றாலே, முதலில் அந்த படத்தின் கதை நடிகரின் அப்பாவுக்குத்தான் சொல்ல வேண்டும், அதன் பின்னர் தான் நடிகரின் காதுக்கு விஷயம் போகும். காரணம் நடிகராகவே தானாக கதைகள் கேட்டு நடித்த படங்கள் ஊத்திக் கொண்டதால் இந்த கதைத் தேர்வு விசயத்தை எல்லாம் அப்பாவிடமே கொடுத்து விடலாம் என்று, முடிவு எடுத்ததால், நடிகரின் அப்பா தான் வழக்கமாக கதை கேட்பாராம்.

Young Star Ignores Father s Advice After Astrologer s Prediction Changes His Career Path

நடிகரின் விபரீத முடிவு: இப்படி கமிட் ஆன ஒரு படத்தின் பூஜையின் போது, நடிகரைச் சந்தித்த ஜோசியர், இப்போது நீங்கள் நடிக்கும் படம் உங்கள் திரை வாழ்க்கையை மொத்தமாக திருப்பி போடும், இனி உங்களுக்கு தடையே இருக்காது என்று கூறியுள்ளார். அதற்கு நடிகரும் படத்தின் கதை கூட உங்களுக்கு என்னவென்று தெரியாது அப்படி இருக்கும்போது எப்படி கூறுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஜோசியரும், உங்க ஜாதகம் இது, இந்த படத்தின் நடிகையின் ஜாதகம் இது, இயக்குநரின் ஜாதகம் இது, தயாரிப்பாளரின் ஜாதகம் இது உங்க எல்லாருக்கும் எல்லாமே நன்றாக உள்ளது. நீங்க உச்சத்தை நோக்கி போவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஜோசியர் தான் இனி எல்லாம்: நடித்துக் கொண்டிருந்த படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து படம் வெளியாகி நடிகருக்கு பெரிய அளவில் ஹிட் அடிக்க, உடனே அந்த ஜோசியரைக் கூப்பிட்டு பாராட்டித் தள்ளியுள்ளார். இது மட்டும் இல்லாமல், தனது மனதில் இருந்த மற்றொரு ஆசையையும் கூறியுள்ளார். அதைக் கேட்ட ஜோசியரும் அதற்கு சில ஐடியாக்கள் கொடுக்க, அதன் மூலம் நடிகரின் வாழ்க்கை மெல்ல மாறியதாம். இதனால் தற்போது நடிகர் தனது அப்பா பேச்சை சுத்தமாக கேட்பதே இல்லையாம். அந்த ஜோசியர் என்ன கூறுகிறாரோ, அதைத்தான் நடிகர் தப்பாமல் செய்கிறாராம். இந்த பேச்சு தான் தற்போது கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X