மாஸ் நடிகரை காப்பி அடிக்கும் வம்பு நடிகர்.. சரிவை சமாளிக்கத்தான் அப்படியொரு விருந்தாம்!
சென்னை: டாப் நடிகரை ஃபாலோ செய்துக் கொண்டிருந்த வம்பு நடிகர் சமீப காலமாக தனது ரூட்டை மாற்றி மாஸ் நடிகரை ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளார்.
மாஸ் நடிகர் செய்ததை போலவே ஆடியோ லாஞ்சை அப்படியே அதே இடத்தில் பிரம்மாண்டமாக நடத்தியும் படத்திற்கு எந்தவொரு பயனும் கிடைக்கவில்லையே என நினைத்த வம்பு நடிகர் மீண்டும் மாஸ் நடிகர் ரூட்டை காப்பியடித்து இருப்பதாக கூறுகின்றனர்.

சீரியல் படத்தை எடுத்து வைத்து விட்டே ரசிகர்களுக்கு விருந்துக் கொடுத்து திருப்திப்படுத்தி எப்படி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தார் என்கிற ரகசியத்தை புரிந்து கொண்ட நிலையில் தான் வம்பு நடிகரும் அப்படியொரு விருந்து கொடுத்துள்ளார் எனக் கூறுகின்றனர்.
கண் கெட்டப்பிறகு சூர்ய நமஸ்காரம்: ஆனால், இந்த விஷயத்தை அந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே செய்திருந்தால் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி இருக்கலாமே என சில பிரபலங்கள் நடிகரின் காது படவே பேசிய நிலையில், அப்போது விட்டதை அடுத்த படத்தில் பிடிக்கத்தான் இப்போ இப்படியொரு விருந்து என வம்பு நடிகர் தனது பலே ஐடியாவை ரிவீல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கைடு பண்ணும் பாஸ் நடிகர்: வம்பு நடிகர் சமீபத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்த படம் கடைசியில் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் அடிக்காமல் தியேட்டரை விட்டே ஓடிய நிலையில், கடும் அப்செட்டாக இருந்த நடிகருக்கு பாஸ் நடிகர் தான் பக்க பலமாக இருந்து அவர் மீது முழு நம்பிக்கை வைத்து வெற்றி தோல்விகள் வருவது சகஜம், நீயும் நானும் அதை பலமுறை பார்த்திருக்கிறோம்.
இனியும் பார்ப்போம். ஆனால், அதற்கு எல்லாம் சோர்ந்து போய் விடாதே.. அடுத்த படம் கண்டிப்பா பெரிய சக்சஸ் தான். அதற்கான முயற்சிகளையும் ரசிகர்களை எப்படி ஒன்று திரட்டுவது என்பதை பார் என அட்வைஸ் சொல்லி தேற்றி உள்ளாராம்.

விருந்தே அதுக்குத்தான்: அவர் கொடுத்த தைரியத்தில் தான் அடுத்து ரசிகர்களை திரட்ட என்ன செய்யலாம். நாம கூப்பிட்டா உடனே வருகின்றனர். அவர்களை அப்படியே அதிகப்படுத்த வேண்டும் என்கிற முனைப்பில் தான் தற்போது அந்த விருந்தே நடிகர் போட்டுள்ளார் என்றும் மேலும், மீடியாக்களையும், ஆன்லைன் டிராக்கர்களையும் விமர்சகர்களையும் சரி கட்ட தேவையான வேலைகளையும் மாஸ் நடிகர் பாணியிலே காப்பியடித்து செய்ய வம்பு நடிகர் ரெடியாகி விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











