மாஸ் நடிகரின் நண்பர்கள் போடும் சீன்.. உச்ச கட்ட கோபத்திற்கு சென்ற இளம் இயக்குநர்!
Recommended Video
சென்னை: பண்டிகை தினத்தன்று மாஸ் நடிகருக்கே போட்டியாக தனது படத்தை வெளியிட்டு மாஸ் காட்டிய அந்த இளம் இயக்குநர் தற்போது உச்ச கட்ட கோபத்தில் இருக்கிறாராம்.
நடிகர்களை கூட்டி வர சொன்னால், தனது நண்பர்களை அந்த மாஸ் நடிகர் கூட்டி வந்து அலப்பறை செய்ததை பொறுத்துக் கொண்ட அந்த இயக்குநர், தற்போது அந்த மாஸ் நடிகரின் நண்பர்கள் போடும் சீனை பார்த்து பயங்கர டென்சன் அடைந்துள்ளாராம்.

ஆரம்பத்தில் அந்த மாஸ் நடிகர் சிபாரிசு செய்தார் என்பதற்காக ஒரு சில நடிகர்களை படத்தில் கமீட் செய்து கொண்டு அவர்களுக்காக திரைக்கதையில் சில மாறுதல்களை செய்து இயக்கத்தை தொடங்கிய அந்த பிரபல இயக்குநர், தற்போது, மார்க்கெட் இழந்த நடிகர்கள், சீரியல் நடிகர்கள் என தனது 20 ஆண்டுகால பழைய நண்பர்களை அந்த படத்தில் இணைத்து இயக்குநருக்கு மெல்லவும் முடியாத முழுங்கவும் முடியாத நெருக்கடியை தந்துள்ளார்.
குறைந்த பட்ஜெட்டில் நல்ல படத்தை கொடுக்கலாம் என நினைத்த அந்த இயக்குநருக்கு, நீண்டு கொண்டே போகும் நடிகர்கள், நடிகைகள் பட்டியலை பார்த்து தலை சுற்றிப் போயுள்ளதாம். தயாரிப்பாளரின் இயக்குநர் என்று பெயர் வாங்கலாம் என கனவு கண்ட அந்த இயக்குநருக்கு, எப்படியாவது இந்த புராஜெக்டை முடித்துக் கொடுத்து எஸ்கேப் ஆனால், போதும் என்ற நிலை உருவாகியுள்ளதாம்.
அதுவும் அந்த சீரியல் நடிகரும் காமெடி என்னவென்றே தெரியாமல் மொக்கை காமெடி பண்ணும் நடிகரும் சேர்ந்து கொண்டு செய்யும் அலப்பறைகளால் ஷூட்டின் ஸ்பாட்டில் தேவையில்லாமல் நேரம் வீணாவதாகவும் இயக்குநருக்கு துணை இயக்குநர்கள் கம்ப்ளைன்ட் லெட்டர் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
இதனால், கோபம் அடைந்த அந்த இயக்குநர், மாஸ் நடிகரிடம், உங்கள் நண்பர்களை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என நேரடியாக சொல்ல முடியாமல் மறைமுகமாக சிக்னல் கொடுத்து வருகிறாராம்.
மேலும், அவர்களால் தான் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் இணையத்தில் கசிவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால், இதையெல்லாம் அந்த மாஸ் நடிகர் கண்டு கொள்வதாகவே தெரியவில்லையாம். மாஸ் நடிகர் படம் என்றால், அவ்வப்போது, புகைப்படங்கள், படத்தின் தலைப்பு, வீடியோ காட்சிகள் என லீக்காவது சகஜம் தான் என்ற மேனியில் திரிந்து வருகிறாராம்.
இதனால், தெரியா தனமாக வந்து மாட்டிக் கொண்டோம் இதில் இருந்து எப்படி தப்பிக்க போகிறோம் என வேக வேகமாக ஷூட்டிங்கை முடிக்க அந்த இளம் இயக்குநர் புலம்பி தவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











