பாய் ஃபிரெண்ட் உடன் ஓடிப்போன நடிகை.. அம்மா தலையில் இறங்கிய இடி.. இனிமேல் நடிக்க மாட்டாரா?
சென்னை: சின்னத்திரை நடிகை கடந்த சில ஆண்டுகளாக ஐடியில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் நபரை காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அவரது காதலுக்கு அந்த நடிகையின் அம்மா சம்மதம் தெரிவிக்காமல் சின்னத்திரையில் நடிக்கணும் சினிமாவுக்கு போகணும் நிறைய சம்பாதிக்கணும் என தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்த நிலையில், அம்மாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தற்போது பாய் ஃபிரெண்ட் உடன் ஓடிப் போய்விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சீரியல் நடிகையாக சில தொடர்களில் அந்த நடிகை சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு அவர் போடும் ரீல்ஸ்களை பார்த்து கணிசமான ஃபாலோயர்களும் உள்ளனர்.

ஐடியில் பணியாற்றும் இளைஞர் ஒருவரை அந்த நடிகை காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அந்த காதலுக்கு அவரது அம்மா அனுமதி தரவில்லையாம்.
காசு தான் முக்கியம்: நன்றாக படித்துக் கொண்டிருந்த பெண்ணை டிவி சீரியலில் சேர்த்து விட்டதே அவருடைய அம்மா தானாம். அப்பா குடித்து விட்டு சம்பாத்தியம் இல்லாமல் இருக்கும் நிலையில், சம்பாதிக்க வேண்டும் என மகளை நடிக்க வைத்திருக்கிறார். குடும்பத்துக்காக அந்த இளம் நடிகையும் தொடர்ந்து பல தொடர்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தங்கையாகவும், கல்லூரி மாணவியாகவும் சீரியல்களில் நடித்து வந்தார்.
காதலில் விழுந்த நடிகை: பக்கத்து தெருவில் வசித்து வரும் இளைஞர் படிக்கும் காலத்தில் இருந்தே நடிகை மீது ஒரு கண்ணாக இருந்திருக்கிறார். அவரும் வாட்டசாட்டமாக அழகாக இருந்த நிலையில், நடிகையும் அவ்வப்போது சைட் அடித்து செல்வாராம். சீரியலில் நடிக்க ஆரம்பித்த பின்னர் அந்த நபர் ஐடியில் நல்ல வேலையில் அமர்ந்தவுடன் காதலை சொல்ல நடிகையும் ஓகே சொல்லியிருக்கிறார்.
எதிர்ப்பு தெரிவித்த அம்மா: ஆனால், இருவரும் காதல் செய்யும் விவகாரம் அம்மாவுக்கு தெரிந்ததும் வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். சீரியலில் இருந்து சினிமாவுக்கு செல்ல இப்போதுதான் உனக்கான சான்ஸ்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். லைஃப்ல நல்லா டெவலப் ஆகி செட்டில் ஆக வேண்டாமா? நீயும் கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டா என்னை யாரு பார்த்துப்பா என அம்மாக்காரி காதலுக்கு எமனாக மாறியிருக்கிறார்.
காதலருடன் எஸ்கேப்: இங்கே தான் இந்த பிரச்சனை என்றால் பையன் வீட்டில் அவங்க வேறு ஆளுங்க என காதலுக்கு அங்கேயும் சிகப்பு கொடி காட்டப்பட்ட நிலையில், இருவரும் ஊரை விட்டே எஸ்கேப் ஆகியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. இரு வீட்டாருக்கும் இடையே சண்டையும் வெடித்து இருப்பதாக கூறுகின்றனர். இனிமேல் அந்த நடிகை நடிப்பாரா? மாட்டாரா? என்கிற கேள்விகளும் எழுந்திருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











