அந்த அளவுக்கு அட்ஜெஸ்ட் பண்ணியும் அடுத்த படத்துக்கு வாய்ப்பு கொடுக்கலையே.. புலம்பும் டிவி நடிகை?
சென்னை: தாராள மனசுள்ள அந்த டிவி நடிகை பிரபல நடிகர் படத்துக்காக ஏகப்பட்ட அட்ஜெஸ்ட் செய்தும் கடைசியில் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் கழட்டி விட்டு விட்டதால் கடுப்பாகி உள்ளார்.
சின்னத்திரையில் இருந்து தடாலடியாக வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என பல இளம் டிவி நடிகைகள் போட்டி போட்டு நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் பிரபல நடிகர் படத்தில் ஒரு சின்ன ரோல் கிடைத்ததற்கே ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட்டுகளை செய்து நடிகருக்கு பிடித்த நடிகையாக அந்த இளம் டிவி நடிகை மாறியிருந்தார். ஆனால், அடுத்து நடிகர் நடிக்கும் படத்திலும் தனக்கு ஒரு சிறு வேடமாவது கிடைக்கும் என எதிர்பார்த்த நடிகைக்கு அல்வா தான் கிடைத்துள்ளதாம்.
பிரபல நடிகர்: பெரிய நடிகருடன் அந்த டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை நடித்த நிலையில், அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த நடிகைக்கு ஒரு படத்தில் கூட வாய்ப்பே கிடைக்காமல் போய் விட்டது. அந்த படத்தில் நடிக்கும் போது சில பல அட்ஜெஸ்ட்மென்ட்டுகளை நடிகை நடிகருக்காக செய்ததாகவும் தொடர்ந்து டச்சில் இருங்க அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தானா தேடி வரும் என நடிகர் சொல்லி இருந்தாராம்.
வாய்ப்பே கிடைக்கல: அதன் பின்னர் அந்த நடிகைக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பே கிடைக்காத நிலையில், ரொம்பவே கவலையாக இருந்த நடிகை பிரபல நடிகர் சமீபத்தில் அடுத்த படத்தை ஆரம்பித்துள்ள நிலையில், அவரது உதவியை நாடி சென்றாராம். ஆனால், இப்போதைக்கு தன்னால் உதவ முடியாத சூழல் இருப்பதாக கூறிய நடிகர் சில ஆயிரங்களை அவருக்கு கொடுத்து அனுப்பியதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
அப்செட்டில் நடிகை: அந்த நடிகரின் தீவிர விசிறி என்பதால் சம்பளம், கால்ஷீட் என பல விஷயங்களில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து நடிகருடன் நடித்தால் மட்டுமே போதும் என நினைத்த நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வாங்கித் தருவதாக கூறிவிட்டு நடிகர் ஏமாற்றிய நிலையில், ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











