நடிகையுடன் ரிலேஷன்ஷிப்.. படவாய்ப்புக்காக தூக்கி எறிந்த வாரிசு நடிகர்!
சென்னை: வாரிசு நடிகர் பிரபல இளம் நடிகை ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு, அவரை கழட்டிவிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்த அப்பா நடிகர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக காதல் கதை, காதல் தோல்வி கதைகளை தேர்வு செய்து நடித்துள்ளார்.
இவருக்கு என்றும், இவர் படத்திற்கு என்றும் தனி ரசிகர் கூட்டமே இருக்கும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

வாரிசு நடிகர்: அப்பா நடிகர் தான் இறப்பதற்கு முன்பாகவே தன் மகனையும் சினிமாவில் நுழைந்துவிட்டார். வாரிசு நடிகர் அறிமுகமான முதல் படம் வெற்றி பெற்றது. அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த அந்த நடிகை தற்போது பாலிவுட், ஹாலிவுட் என மாஸ் காட்டி வருகிறார். ஆனால், வாரிசு நடிகரால் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
திருமணம் செய்யவில்லை: வாரிசு நடிகரான இவர், தனது சகோதரனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் செய்து விட்டு. இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார். இதற்கு காரணம் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதும், இவரால் ஒரு நல்ல இடத்தை அடைய முடியாமல் தவித்து வருகிறார்.
நடிகையுடன் ரிலேஷன்ஷிப்: இந்நிலையில்,வாரிசு நடிகரான இவர், தன்னுடன் இணைந்து நடித்த நடிகையை காதலித்து வந்த நிலையில், இருவரும் ஒரே வீட்டில் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். அந்த நடிகைக்கோ படவாய்ப்பு இல்லாததால், இவரையே திருமணம் செய்து செட்டிலாகி விடலாம் என கணக்கு போட்டுவைத்திருந்தார்.
கண்ணீருடன் புலம்பும் நடிகை: இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட தொடங்கிய நிலையில், ரகசிய உறவு பற்றிய தகவல் வெளியே வந்தால், சினிமா வாழ்க்கையே போய்விடும் என்ற பயத்தில், வாரிசு நடிகர், அந்த நடிகையை கழட்டி விட்டுவிட்டு ஒதுங்கி உள்ளார். நடிகரை நம்பி கனவு கோட்டையில் வாழ்ந்து வந்த அந்த நடிகை, சினிமா வாழ்க்கையும் போச்சு, காதலும் போச்சு என்று கண்ணீர் விட்டு கதறி அழுது வருகிறார்.


Click it and Unblock the Notifications











