டப்ஸ்மாஷ் செய்து ஹீரோவானாராம்: இதெல்லாம் நம்பும்படியாவா இருக்கு?
சென்னை: ஒரு இளம் வாரிசு நடிகர் டப்ஸ்மாஷ் செய்து ஹீரோவானதாக தயாரிப்பாளர் கூறியதை கேட்டு தான் கோலிவுட்காரர்கள் சிரிக்கிறார்கள்.
திறமையான நடிகர் ஒருவர் தனது மகனை தன் வழியில் ஹீரோவாக்கிவிட்டார். அந்த வாரிசு நடித்துள்ள படம் ரிலீஸாவதற்குள் ஒரு சர்ச்சையில் சிக்கிவிட்டார்.
இந்நிலையில் வாரிசு நடிகருக்கு இந்த பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது தெரிய வந்தது.

தயாரிப்பாளர்
வாரிசு நடிகர் ஒரு டப்ஸ்மாஷ் செய்து வீடியோ வெளியிட்டாராம். அந்த வீடியோவை பார்த்து தான் அவரை ஹீரோவாக்கியதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்துக் கொண்டு யாரை ஹீரோவாக போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அந்த டப்ஸ்மாஷ் வீடியோவை பார்த்தாராம் அவர்.

பட வாய்ப்பு
தயாரிப்பாளர் அப்படி பெருமையாக புகழ்ந்து பேசிய டப்ஸ்மாஷில் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை. அதை பார்த்துவிட்டு வாரிசு நடிகரை ஹீரோவாக போட்டதாக தயாரிப்பாளர் கூறியது நம்பும்படி இல்லை. வாரிசு நடிகரை தான் நடிக்க வைத்த நினைத்தோம், படத்தை எடுத்தோம் என்று உண்மையை சொல்லாமல் எதற்காக இந்த தேவையில்லாத பொய் என்று விபரம் அறிந்தவர்கள் கலாய்க்கிறார்கள்.

நடிகர்
படத்தின் டீஸரை பார்த்தவர்கள் வாரிசு நடிகரை பாராட்டினாலும் ஒரிஜினல் படத்தில் நடித்தவருடன் ஒப்பிடும்போது அந்த அளவுக்கு இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் ஹீரோயினுடைய முகபாவனைகளும் சரி இல்லை என்று கூறப்படுகிறது. வாரிசு நடிகரை பார்க்கும்போது அவர் அப்பாவை சின்ன வயதில் பார்த்தது போன்றே இருக்கிறது.

எதிரி
இந்த டப்ஸ்மாஷ் காமெடி ஒரு புறம் இருக்க வாரிசு நடிகரின் அப்பா மறுபுறம் காமெடி செய்தார். முன்பெல்லாம் மீடியாகாரர்களை பார்த்தால் சிரித்துப் பேசி சகஜமாக பழகும் அவர் தற்போது நைசாக நழுவிவிடுகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மீடியா அவருக்கு எதிராக திரும்பிவிட்டதாக கூறினார் பிறகு என்ன நினைத்தாரோ அப்படியே பிளேட்டை மாற்றிப் போட்டுவிட்டார்.


Click it and Unblock the Notifications











