»   »  "மத்திய பிரதேச மகாராணி!

"மத்திய பிரதேச மகாராணி!

Subscribe to Oneindia Tamil

குத்துப் பாட்டுக்கு ஆடுவதாக இருந்தால் சொல்லுங்கள், வந்து ஆடி விட்டுப் போகிறேன் என்று படு தில்லாக கூறுகிறார் சபீ கான்.

சபீ கான் யார் என்று தெரியாதவர்கள் உடனடியாக "தகதிமிதா படத்தைப் போய் பார்த்து விட்டு வந்து இந்த செய்தியைப் படித்தால்நல்லது.

வாழைத் தண்டு போல படு நெகிழ்வாக இருக்கும் சபீ கான். பிறந்தது மும்பையில் (அதானே!). பேஷன் டிசைனில் கை தேர்ந்தவர்,மாடலிங் செய்து கலக்கியவர். போனால் போகிறதென்று பி.காம் வரைக்கும் படித்தவர்.

பளிச் அழகுடன், படு கவர்ச்சியாக காணப்படும் சபீ கானுக்கு தமிழ் சினிமாவில் வரும் குத்துப் பாட்டுக்கள் என்றால் ரொம்பஇஷ்டமாம். இதனால்தான் மாடலிங்குக்கு தற்காலிகமாக டாட்டா காட்டி விட்டு கோலிவுட்டிற்கு வந்து விட்டார்.

நடிப்பது, அவார்டு வாங்குவது எல்லாம் சுத்த ஹம்பக், எனக்கு நல்ல அழகு, இளமை உள்ளது. குத்துப் பாட்டு என்றால் ரொம்பஇஷ்டம், அது நமது உடலுக்கும், மனதுக்கும் ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

எனவே குத்துப் பாட்டுக்கு மட்டுமே ஆடி ரசிகர்களை மகிழ்விப்பது என்ற கொள்கை முடிவில் இருப்பதாக கூறும் சபீ கான்,பெல்லி டான்ஸிலும் கை தேர்ந்தவராம்.

"தகதிமிதா ஷூட்டிங்கின் போது சபீயின் அழகைப் பார்த்து அசந்து போன யூனிட்டார் அவருக்கு மத்திய பிரதேச மகாராணிஎன்றே பெயர் வைத்து அழைத்து மகிழ்ந்தார்களாம். "மத்திய பிரேதசம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியும்தானே!

பக்கம் பக்கமாக வசனம் பேசி, கண்ணீர் விட்டு அழுது, உதடு துடிக்க நடிப்பதுதான் நடிப்பு என்று கூறுகிறார்கள். அது தவறு,கவர்ச்சியாக நடிப்பதும் ஒரு கலைதான். அசிங்கமாக இல்லாமல் ரசிக்கும்படி நடிப்பது அவ்வளவு ஈசியானது இல்லை என்றும்கவர்ச்சி நடிப்புக்கு தனி இலக்கணமே வகுக்கிறார் சபீ கான்.

இளம் நடிகர்கள், மூத்த நடிகர்கள், முத்தல் நடிகர்கள் என யாருடன் வேண்டுமானாலும் குத்தாட்டம் போட நான் தயார், அவர்கள்தயாரா என்று முண்டா தட்டி களத்தில் குதித்துள்ள சபீ, கோலிவுட்டில் குத்தாட்டத்தில் சாதனை படைக்காமல் மும்பை திரும்பமாட்டேன் என்றும் சூளுரைக்கிறார்.

ஆட்ரா ராசா, ஆட்ரா ராசா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil