Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'3 இடியட்ஸ்'-சிம்பு மறுப்பு?
இந்தியில் மெகா ஹிட் ஆன படம் 3 இடியட்ஸ். இப்படம் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்காரர்களின் கையில் சிக்கியுள்ளது. இந்த தமிழ்- தெலுங்கு ரீமேக் படங்களில் ஹீரோக்களாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
விஜய் நடிக்கிறார், சிம்பு நடிக்கிறார், மாதவன் நடிக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் மாதவன் நடிக்கும் ஐடியாவில் இல்லை என்று கூறி விட்டார். மன்மதன் அம்பு படத்தில் தற்போது அவர் பிசியாக உள்ளார். தமிழ் ரீமேக்கில் நடிக்கும் எண்ணமே இல்லை என்று அவர் தனது ட்விட்டர் தகவலில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சிம்புவும் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. விஜய்யுடன் இணைந்து நடிக்க சிம்புவுக்கு விருப்பம் இல்லையாம்.
விஜய்யாவது இதில் நடிப்பது உறுதியா என்றால் அதுவும் தெரியவில்லை.
படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பது மட்டுமே இப்போதைக்கு உறுதியான ஒன்றாக தெரிகிறது. அதேபோல படத்தை ஷங்கர் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது. அதுவும் கூட இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.