twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத்திரையின் காஸ்ட்லி இந்தி நடிகர் ரித்திக் ரோஷன்: எபிசோடிற்கு '2சி' மட்டுமே!!

    By Siva
    |

    Hrithik Roshan
    மும்பை: பாலிவுட் சூப்பர் ஹீரோ ரித்திக் ரோஷன் சின்னத்திரை நடன ரியாலிட்டி ஷோவில் நடுவராக வரவிருக்கிறார். இதற்கு ஒரு எபிசோடுக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசியுள்ளனராம். இதன் மூலம் சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் ரித்திக்.

    உடலை ரப்பர் போல வளைத்து, நெளித்து, குழைத்து ஆடுவதில் ரித்திக்கு நிகர் ரித்திக்தான். அவர் டான்ஸ் ஆடுவதைப் பார்த்தால் ஏதோ பாம்புதான், ஜீன்ஸ், டீசர்ட் போட்டுக் கொண்டு டபாய்க்கிறதோ என்று சந்தேகம் வரும். அப்படி ஒரு ஆட்டம் போடுபவர் ரித்திக்.

    இந்த நிலையில், ஸ்டார் பிளஸ் சேனல் ஜஸ்ட் டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவை அடுத்த மாதம் துவங்குகிறது. அதற்கு நடுவராக ரித்திக்கை அழைத்துள்ளது. பிரபல நடன இயக்குனர்கள் பரா கான், வைபவி மெர்ச்சன்ட் ஆகியோரும் நடுவர்களாக இருப்பார்கள். இது தான் ரித்திக்கின் முதல் சின்னத்திரை நிகழ்ச்சி.

    அவரது கைட்ஸ் மற்றும் குஜ்ஜாரிஷ் ஊத்திக் கொண்டதையடுத்து தற்போது சின்னத்திரையிலாவது வெற்றி கிடைக்கட்டும் என்று எதிர்பார்க்கிறார்.

    கடந்த மாதம் இந்நிகழ்ச்சி அறிமுக விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட ரித்திக் பெரிய தோல்விகளுக்குப் பிறகு தான் பெரிய வெற்றி வரும் என்றார்.

    இந்த நடன நிகழ்சசிக்காக ரித்திக்கிற்கு ஒவ்வொரு எபிசோடிற்கும் ரூ. 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். தனக்கு நல்ல சம்பளம் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைப்பதாக ரித்திக்கும் கூறியுள்ளார்.

    சின்னத்திரையில் இதுவரை யாரும் இவ்வளவு பெரிய சம்பளம் வாங்கியதில்லை. எனவே டிவி நிகழ்ச்சிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரித்திக் தான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

    ரித்திக் வந்தாச்சுல்ல, இனி டிவியும் டான்ஸ் ஆடும்!

    English summary
    Bollywood heartthrob Hrithik Roshan is making his debut in smallscreen as a judge for a reality dance show named Just Dance in star plus. It is told that he is paid Rs. 2 crore per episode. Sources close to the actor said that he is the highest paid filmstar in small screen.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X