'செல்லத்திற்கு' வந்த சோதனை!

தென்னிந்தியாவின் முன்னணி கேரக்டர் நடிகர்களில் முக்கியமானவரான பிரகாஷ் ராஜ் மீது தெலுங்குத் திரையுலகில் ஏகப்பட்ட புகார்கள், குமுறல்கள். இவரால் பல பெரிய நடிகர்களின் படங்கள் தாமதமாவதாக புகார்கள் பறந்தன.
படப்பிடிப்புக்கு சரியாக வட மாட்டேன் என்கிறார். வந்தாலும் லேட் ஆக வருகிறார், கால்ஷீட் சொதப்புகிறார் என புகார்கள். சமீபத்தில் இதுதொடர்பாக ஜூனியர் என்டிஆரும், பவன் கல்யாணும், பிரகாஷ் ராஜால் தங்ளது படங்கள் பெரும் தாமதமாவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தனர்.
சில மாதங்களுக்கு முன்பும் பிரகாஷ் ராஜ் மீது புகார்கள் குவிந்ததால் அவருக்கு தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம். பின்னர் எச்சரிக்கையுடன் தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆனால் அதன் பின்னரும் கூட பிரகாஷ் ராஜின் சொதப்பல்கள் நின்றபாடில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது மீண்டும் பிரகாஷ் ராஜுக்கு இடைக்காலத் தடை விதித்து தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











