twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கரின் சம்பள பாக்கி!

    By Staff
    |

    Kamal Hassan
    வசூலில் ஸ்ட்ராங்காக போய்க் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்காக பணியாற்றிய பல டெக்னீஷியன்களுக்கு படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சம்பளப் பாக்கி வைத்துள்ளாராம்.

    இதுவரை ரூ. 20 கோடி வரை இப்படத்துக்கு லாபம் கிடைத்திருக்கிறதாம். நகர்ப்புறப் பகுதிகளில் நல்ல வசூலுடன் தசாவதாரம் கலக்கிக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், படத்தின் டெக்னீஷியன்கள், இரண்டாம் கட்ட நடிகர்கள் தங்களுக்கு தயாரிப்பாளர் நிறைய சம்பள பாக்கி வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டத் துவங்கியிருக்கிறார்கள்.

    இவர்களில் பலர் கேகே நகரில் உள்ள ஆஸ்கரின் ஆபீசுக்கு நடையாய் நடந்தும் சம்பள பாக்கியை செட்டில் செய்யும் ஐடியாவிலேயே இல்லையாம் ஆஸ்கர்.

    இத்தனைக்கும் கமல்ஹாசனுக்கு இவர் கொடுத்திருக்கும் மொத்த சம்பளமே ரூ.7 கோடிதான் என்கிறார் கமலின் பிஆர்ஓ.

    சம்பள பாக்கிக்குக் காரணமே கமல் - ஆஸ்கர் இடையே, படம் தொடங்கியதிலிருந்து நிலவி வரும் பனிப்போர்தானாம்.

    தசாவதாரத்துக்காக பணியில் அமர்த்தப்பட்ட டெக்னீஷியன்கள் அனைவருக்குமே கமல்ஹாசன்தான் சம்பளம் பேசினாராம். வழக்கமாக ஆஸ்கர் தரும் சம்பளத்தைவிட நல்ல சம்பளம் நிர்ணயித்தாராம் கமல். அதனால்தான் இரவு பகல் பாராமல் இந்தப் படத்துக்கு கடுமையாரக உழைத்தார்களாம்.

    ஆனால் படம் வெளியாகி, நல்ல வசூலும் கிடைத்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் இப்படி இழுத்தடிப்பது அனைவரையும் கடுப்பேற்றியுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசனிடம் தெரிவித்துவிட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரத் திட்டமிட்டுள்ளனர் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும்.

    உழைப்பாளி வியர்வை காயுமுன் கூலியைக் கொடுத்திடுங்க!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X