கஸ்தூரிராஜா படத்தில் மீண்டும் தனுஷ்!

துள்ளுவதோ இளமை மூலம் தனுஷை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் கஸ்தூரிராஜா. பின்னர் மகன் பெரிய்ய நடிகராகி, சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகனும் ஆகிவிட, மகனின் புகழைப் பரப்பும் பிஆர்ஓ போல செயல்பட்டு வந்த கஸ்தூரி ராஜா, அவ்வப்போது தனது சினிமா இயக்குநர் பசிக்கு தீனி போடுமாறு மகனைக் கேட்டு வந்தாராம்.
ஆனால் அதற்கு பதில், 'நீங்க படம் தயாரிங்க, நான் நடிக்கிறேன்' என்று பாதுகாப்பாக ஒதுங்கிக் கொண்ட தனுஷ், தொடர்ந்து மூன்று படங்கள் நடித்தார். இப்போது வெளிப்படங்களில் நடித்து வருகிறார்.
இப்போது, தான் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த கதைகளில் ஒன்றை தனுஷுக்கு சொல்லி சம்மதம் வாங்கி விட்டாராம் கஸ்தூரி ராஜா. இந்தப் படத்துக்கு 'காதல் வசமாகி' என்று பெயர் சூட்டியுள்ளார் கஸ்தூரி ராஜா.
கதாநாயகியாக மகன் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரையே ஒப்பந்தம் செய்வதாகவும் கூறிவிட்டாராம்.
நயன்தாராவாக இருந்தாலும் ஓகேவா!


Click it and Unblock the Notifications











