மம்முட்டிக்குத் தடை?

கேரள பிலிம் சேம்பருக்கும், நடிகர்கள் சங்கத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதன்படி, புதுப் படங்கள் ரிலீஸானால், அதன் விளம்பரம் தொடர்பாக மட்டுமே டிவிகளுக்கு நடிகர், நடிகைகள் பேட்டி கொடுக்கலாம். மற்றபடி தனிப்பட்ட முறையில் பேட்டியோ, நிகழ்ச்சிகளோ கொடுக்கக் கூடாது.
ஆனால் இதை மீறி நடிகர் மம்முட்டி, மம்முட்டி - தி பெஸ்ட் ஆக்டர் அவார்ட் என்ற நிகழ்ச்சியை நடத்த ஒப்புக் கொண்டுள்ளாராம்.
இதை பிலிம்சேம்பர் கண்டித்துள்ளது. இது ஒப்பந்தத்தை மீறிய செயல். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்தை கேட்டுள்ளோம். அவர்கள் எடுக்காவிட்டால் நாங்களே மம்முட்டிக்குத் தடை விதிப்போம் என்று சேம்பர் தலைவர் பசல் கூறியுள்ளார்.
இதனால் மலையாளத் திரையுலகம் பரபரப்பாகியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications