பிச்சிக்கிட்டு ஓடும் பிரசன்னா!

By Staff

Prasanna with Kavya Mathavan
அஞ்சாதே படத்தில் நெகட்டிவான ரோலில் நடித்தாலும் நடித்தார், பிரசன்னாவைத் தேடி வில்லன் ரோல்கள் அலை பாய்ந்து ஓடி வருகிறதாம். அய்யோ சாமி ஆளை விடுங்க என்று அந்த வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம் பிரசன்னா.

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நாயகர்களில் பிரசன்னாவும் ஒருவர். அவரது முக வாட்டத்திற்கு சாப்ட் கேரக்டர்கள்தான் பொருத்தமாக வரும். இருந்தாலும் அஞ்சாதே படத்தில், மிஷ்கின் கேட்டுக் கொண்டதற்காக நெகட்டிவான ரோல் செய்தார். அதேபோல சாது மிரண்டா படத்தில் அதிரடி நாயகன் வேடத்தில் கலக்கினார்.

இந்த நிலையில் அஞ்சாதே கேரக்டர் கோலிவுட்டில் பிரசன்னாவைப் பற்றிய வேறு விதமான அலையைப் பரப்பி விட்டதால், அவரைத் தேடி இப்போது வில்லன் கேரக்டர்கள் வரத் தொடங்கியுள்ளதாம்.

என்னடா இது வம்பாப் போச்சே என்று குழம்பிப் போன பிரசன்னா, ஒரு படத்தில் நடித்த கேரக்டரை வைத்து ஏன் ஒட்டுமொத்தமாக முடிவெடுக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறாராம்.

அவரைத் தேடி கிட்டத்தட்ட 5க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் கேரக்டர் வாய்ப்புகள் வந்துள்ளதாம். ஆனால் அத்தனையையும் ஒரேயடியாக நிராகரித்து விட்டாராம் பிரசன்னா.

நான் அனைத்து விதமான கேரக்டர்களிலும் நடிக்க விரும்புகிறேன். எனக்கு ஹீரோ, வில்லன், கேரக்டர் என எந்தப் பாரபட்சமும் கிடையாது. கதையின் நாயகனாக இருக்கவே விரும்புகிறேன். எனக்கு எந்த முத்திரையும் தராதீர்கள், ப்ளீஸ் என்று தன்னைத் தேடி வருகிறவர்களிடம் அன்போடு கூறி அனுப்பி வைக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X