ஆஸி. சம்பவங்கள்-அமிர் கவலை

இந்த தாக்குதல்களுக்கு தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் பொருட்டு, தனக்கு ஆஸ்திரேலிய அமைப்பு வழங்கிய டாக்டர் பட்டத்தையே புறக்கணித்தார் அமிதாப் பச்சன். இப்போது அமீர் கானும் தன் பங்குக்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது ப்ளாக்கில் அவர் எழுதியிருப்பதாவது:
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது அவமானகரமான விஷயமாக உள்ளது. இவற்றை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியா உடனே இறங்க வேண்டும்.
இதனால், எல்லா ஆஸ்திரேலியர்களும் இனவெறி பிடித்தவர்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் ஒருமுறை இருமுறை அல்ல... பலமுறை இம்மாதிரி தாக்குதல்கள் நடந்துள்ளன.
நம் நாட்டினரைத் தாக்குகிறார்களே என்பதற்காக அந்நிய நாட்டுக்கார்கள் யாரையும் இந்தியர்கள் தாக்கிவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அமீர்.


Click it and Unblock the Notifications











