ரஜினி தந்த தீபாவளிப் பரிசு!

By Sudha

எந்திரனில் 'ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ்' என துப்பாக்கி புல்லட்டுகளை தீபாவளிப் பரிசாகத் தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, நிஜத்தில் சென்னையின் இரு முக்கிய காவல் நிலையங்களைச் சேர்ந்த அனைத்துப் போலீசாருக்கு அட்டகாசமான தீபாவளிப் பரிசுகளை அள்ளித் தந்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம், தேனாம்பேட்டை காவல் நிலையங்களில் உள்ள அனைத்துப் போலீசாருக்கும் ஒரு பேண்ட்-ஷர்ட், புடவை, ஒரு கிலோ இனிப்பு, காரம் மற்றும் பெரிய பட்டாசு கிப்ட் பாக்ஸ் அடங்கிய பார்சல் அது!

இந்த இரு காவல் நிலைய போலீசாரும், ரஜினியின் போஸ் கார்டன் இல்லம், ராகவேந்திரா மண்டபம் மற்றும் ரஜினி பணியாற்றும் ஸ்டுடியோக்களில் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள். அந்த வகையில், மேலிட அனுமதி பெற்று இந்த பரிசுகளை அளித்துள்ளார் ரஜினி.

தனக்காக இரவு பகல் பாராமல் பணியிலிருக்கும் போலீசார், தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாட ஒரு சிறிய பரிசு இது என்றும் அவர் குறிப்பு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து நாம் விசாரித்த போது, "இந்த தகவல் வெளியில் தெரிய வேண்டாம் என்றுதான் ரஜினி சாரிடமிருந்து குறிப்பு வந்திருந்தது. ஆனால் எப்படியோ மீடியாவுக்கு விஷயம் தெரிந்துவிட்டது..." என்ற அதிகாரி ஒருவர், அடுத்து இப்படிச் சொன்னார்', "தமிழகத்தின் அனைத்துப் போலீஸ் நிலைய காவலர்களும் இப்படி ரஜினியிடம் பரிசு வாங்க ஆவலாக இருக்கிறார்கள். அதற்கு மனசு வைப்பாரா ரஜினி?" என்று கண் சிமிட்டினார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X