ரசிகர்கள் சந்திப்பு-ஒத்தி வைத்த ரஜினி!

ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் 140 கோடி செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை ஷங்கர் டைரக்டு செய்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்கா, பிரேசில், பெரு ஆகிய நாடுகளில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இவற்றைத் தவிர, ரஜினி பங்கேற்ற சில முக்கியக் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன.
ரஜினி் கடந்த 27ம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார். எந்திரன் படக் குழுவினர் கடந்த 28ம் தேதி சென்னை திரும்பினார்கள்.
இருவார ஓய்வுக்குப் பின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு, கோவாவில் நடைபெற உள்ளது. வரும் 7ம் துவங்கும் இந்தப் படப்பிடிப்பில் ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் நடிக்கும் பாடல் இன்னொரு பாடல் காட்சியும், சில காதல் காட்சிகளும் படமாக்கப்படுகின்றன.
இங்கு மொத்தம் 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
சந்திப்பு இப்போது இல்லை:
இந் நிலையில் நாளை மறுதினம் தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசுவதாக ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா மூலம் கூறியி்ருந்தார் ரஜினிகாந்த். ஆனால் இப்போது அந்த திட்டத்தை தள்ளிப்போட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி கோவா சென்று வந்தபின் ரசிகர்களைச் சந்திப்பார் என அகில இந்திய ரஜினிகாந்த் மன்ற தலைவர் சத்யநாராயணா ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பது மற்றும் புதிய இயக்கம் தொடங்குவது குறித்து தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ரஜினி நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்தது.


Click it and Unblock the Notifications











