ஜெயிச்சாதான் மரியாதை!-ரமணா

By Staff

Ramana
நாயகன் படத்தின் ரிசல்ட் அதன் நாயகர்கள் ரமணா மற்றும் ரித்தீசுக்கு புதிய அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. குறிப்பாக இந்தப் படத்தின் வெற்றியால் பெரிதும் உற்சாகமடைந்திருப்பவர் ரமணா.

தமிழ், தெலுங்கில் கிட்டத்தட்ட 10 படங்கள் நடித்தும் நல்ல பிரேக் கிடைக்காமல் தனக்கான வாய்ப்புக்காகக் காத்திருந்தவர் ரமணா.

ரமணா நடித்து கடைசியாக வந்த படம் அந்த நாள் ஞாபகம். அதன்பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் நாயகனில் மூழ்கியிருந்தார்.

"நாயகன் படம் பிள்ளையார் சுழி போடப்பட்டதிலிருந்தே அதன் ஒவ்வொரு வளர்ச்சியிலும் என் பங்களிப்பு இருக்கிறது. ஒரு உதவி இயக்குநராக, தயாரிப்பு உதவியாளராக, நடிகனாக... பல விதங்கலில் என் உழைப்பை இதில் செலவிட்டிருக்கிறேன். அதற்கான பலன் இப்போது திரையரங்குகளில் தெரிகிறது. வார இறுதி நாட்களைவிட, சாதாரண நாட்களில் நாயகன் படத்துக்கு அதிக ரசிகர்கள் வருவதாக பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

ஒரு நடிகனாக இதுதான் எனக்கு முதல் வெற்றி. சினிமாவில் ஜெயிப்பவர்களுத்தான் எப்போதும் மரியாதை. அந்த வகையில் இப்போதுதான் எனக்கான மரியாதையை உணர்கிறேன்..." எனும் ரமணா தற்போது 4 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

'அடுத்து வரும் என்னுடைய படம் துணிச்சல். இந்தப் படத்தில் என்னுடன் நடித்திருப்பவர் அருண் விஜய். இருவருக்குமே நல்ல வேடங்கள். அடுத்தது அஜந்தா. நான்கு மொழிகளில் தயாராகிவரும் படம் இது. இதில் சைக்கோ கேரக்டரில் நடிக்கிறேன்...' எனும் ரமணா விரைவில் நடிக்கவிருக்கும் படத்துக்கு தில்லுமுல்லு எனத் தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

ஜெயிச்சா சரி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X