எஸ்.ஜே. சூர்யாவின் 'நியூட்டனின் மூன்றாம் விதி'

'நியூட்டனின் மூன்றாம் விதி' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிக்கப் போவது எந்த விதிக்கும் கட்டுப்படாத எஸ்.ஜே.சூர்யா.
'ஒரு சூப்பர்ஹிட் படத்தை இயக்கி வெளியிட்ட பிறகுதான் மீண்டும் நடிக்க வருவேன்' என்று தனக்கு தானே போட்டுக் கொண்ட சபதத்தை 'விதியே' என்று விட்டுவிட்டு இதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் எஸ்.ஜே.
இந்த 'மூன்றாம் விதியை' இயக்குவது அறிமுக இயக்குநர் சாய் செல்வா.
எஸ்.ஜே.சூர்யா, தற்போது வில் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் உடல் ஊனமுற்றவராக வருகிறார் சூர்யா. பிரபாகர் படத்தை இயக்கி வருகிறார்.
இந் நிலையில்தான் புதியவரான சாய் செல்வா கூறிய கதையைக் கேட்டு அசந்து போன சூர்யா, தான் இயக்கவிருந்த புலி படத்தை ஒத்தி வைத்துவிட்டு இந்தக் கதையில் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.
இயக்குநர் வின்சென்ட் செல்வாவின் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றியவர் தான் சாய் செல்வா. படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் துவக்கமும் வரும் ஏப்ரல் 8ம் தேதி ஏவிஎம் படத் தளத்தில் நடக்கிறது.
இப்படத்தின் பூஜையும், படப்பிடிப்பும் ஏப்ரல் 8ம் தேதி ஏவி.எம். ஸ்டுடியோவில் நடக்கவுள்ளது.
'நியூட்டனின் மூன்றாம் விதி', எஸ்.ஜே.சூர்யாவின் 'தொடர் தோல்வி' விதியை சரி செய்தால் சரி.


Click it and Unblock the Notifications











