அரசியலில் ஷாரூக்-காங். சார்பில் போட்டி?

இத்தொகுதியின் தற்போதைய எம்பி கோவிந்தா. இவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படாது என்று சிலரும், மீண்டு்ம் தேர்தலைச் சந்திக்க கோவிந்தா விரும்பவில்லை என்று சிலரும் கூறுகின்றனர்.
இதுகுறித்து மும்பை பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கிருபா சங்கர் சிங் கூறுகையில், கோவிந்தாவின் செயல்பாடு குறித்து நான் எதும் கூறுவதற்கில்லை. ஆனால் ஷாரூக்கானை இந்தத் தொகுதியின் எம்பியாக்க விரும்புகிறோம். கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு ஷாரூக் கானுக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
ஷாரூக் ஒப்புக் கொண்டால் கோவிந்தாவுக்கு பதில் வடக்கு மும்பை தொகுதியில் அவருக்கு சீட் தரப்படும் என்றும் கிருபா சங்கர் தெரிவித்தார்.
ஷாருக் கானுக்கு பல காலமாகவே காங்கிரஸ் வலை வீசி வருவது குறிப்பிடத்தக்கது. இம்முறை அவர் காங்கிரஸ் கோரிக்கையை ஏற்பார் என்று கூறப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications