எம்.ஜி.ஆர். - விஜய்யின் 50வது படம்!

இப்போது அந்தச் செய்தியை ஜெயம் ராஜாவே உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
இதுவரை என் தம்பி ரவியை மட்டுமே வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்த நான் முதல்முறையாக விஜய்யை வைத்து ஒரு படம் இயக்குகிறேன் என்பது உண்மைதான். அது விஜய்யின் 50-வது படமா என்று எனக்குத் தெரியாது.
ஆனால் இது ரீமேக் அல்ல. ஒரிஜினல் ஸ்கிரிப்ட்தான். விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும், என ராஜா தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை தயாரிப்பவர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரன்.
போக்கிரிக்குப் பிறது அடுத்தடுத்து தோல்விப் படங்களாக அமைந்துவிட்டதால், தனது பாக்ஸ் ஆபீஸ் இமேஜை தக்க வைத்துக் கொள்ளும் நெருக்கடியில் உள்ள விஜய், இந்தப் படத்துக்கு தேர்வு செய்துள்ள தலைப்பு எம்ஜிஆர் என்கிறார்கள்.
தலைவர் சென்டிமெண்ட் கைகொடுக்குமா!!
Comments


Click it and Unblock the Notifications