ஹரிக்காக காத்திருக்கும் விஜய்

By Staff
Vijay with Namitha
இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் நடிகர் விஜய்க்காக காத்திருக்கும் நிலையில், ஹரியின் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கிறார் விஜய்.

விஜய் கால்ஷீட் கிடைக்க எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்க தயாராக பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் உள்ளனர். தயாரிப்பாளர் ஏவி.எம். பாலசுப்ரமணியம் கூட தனது தயாரிப்பில் விஜய் நடிப்பதற்காக முழு சம்பளத்தையும் அட்வான்ஸ் ஆக கொடுத்து விட்டு, 3 ஆண்டுகள் கழித்து சமீபத்தில்தான் விஜய்யின் சம்மதத்தைப் பெற்றார்.

அந்த அளவுக்கு விஜய்க்கு டிமாண்ட் உள்ள நிலையில், இயக்குநர் ஹரிக்காக காத்திருக்கிறாராம் விஜய்.

சாமி, ஐயா, வேல் என தொடர்ந்து வெளுத்து வாங்கி வரும் ஹரியின் இயக்கத்தில் நடிக்க விஜய் ஆர்வமாக உள்ளார். சமீபத்தில் வேல் படத்தை விஜய்க்காக ஸ்பெஷலாக போட்டுக் காட்டினர். படத்தைப் பார்த்த விஜய் அசந்து போய் விட்டாராம்.

உடனடியாக தயாரிப்பாளர் ஏவி.எம். பாலசுப்ரமணியத்தைத் தொடர்பு கொண்டு நமது படத்தை ஹரிதான் இயக்க வேண்டும். அவரது கால்ஷீட்டை வாங்கி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

ஆனால் தற்போது ஹரி 2 பெரிய படங்களில் புக் ஆகியுள்ளார். ஒரு படத்தில் பரத் இயக்குகிறார். அடுத்த படத்தில் விக்ரமை இயக்கவுள்ளார்.

விக்ரம் மனம் வந்து, லேட்டாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினால் அந்த கேப்பில் விஜய் படத்தை இயக்க முடியும். இல்லாவிட்டால் இரு படங்களும் முடியும் வரை விஜய் காத்திருக்க வேண்டுமாம்.

ஆனால் ஹரிக்காக விஜய் காத்திருக்கவும் தயார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X