twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தூம் 3: வில்லன் அமீர்கான்!

    By Shankar
    |

    Aamir Khan
    தூம் 3- படத்தின் வில்லனாக ஒப்பந்தம் செய்ய்யப்பட்டுள்ளார் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான்.

    விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்க, ஆதித்ய சோப்ரா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஹீரோக்களாக அபிஷேக் பச்சனும் உதய் சோப்ராவும் நடிக்கின்றனர்.

    இந்தப் படத்தில் ஹீரோக்கள் பாத்திரங்களை விட, வில்லன் பாத்திரத்துக்கே அதிக முக்கியத்துவம். எனவே இந்தப் பாத்திரத்தில் நடிக்க பெரிய நடிகர்களிடம் பேச்சு நடத்தி வந்தது யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம்.

    இந்த நிலையில் வில்லன் வேடத்தில் அமீர்கான் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமீர் கான் கூறுகையில், "தூம் 3-ன் வில்லன் வேடத்தில் நடிப்பதை பெருமையாகக் கருதுகிறேன். இது ஒரு பெருமைக்குரிய பாத்திரம். தூம் ஒரு அருமையான பொழுதுபோக்குப் படம். அதன் தொடர்ச்சியில் நடிக்க நான் விரும்பினேன்.." என்றார்.

    தூம் 3 குறித்து யாஷ் சோப்ரா கூறுகையில், "யாஷ் சோப்ரா பேனரில் அமீர்கான் நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது" என்றார்.

    English summary
    Aamir Khan villain in the much awaited sequel Dhoom 3. Directed by Vijay Krishna Acharya (Victor), Abhishek Bachchan and Uday Chopra will continue in their much loved roles of Jai Dixit and Ali. The film will begin shooting end of this year and is slated for a 2012 Christmas release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X