சின்னத்திரையே சரணம்... சத்யராஜ் தடாலடி!
தொன்னூறுகளின் இறுதியில், டிவிக்கும் சினிமாவுக்கும் நடந்த யுத்தம் அத்தனை பிரசித்தம்.
'சினிமாவை அழிக்க வந்த டிவிக்களுக்கு பேட்டியே கொடுக்க மாட்டேன்' என்று சபதமே போட்டவர்களும் உண்டு. அவர்களில் முக்கியமான ஒருவர் விஜயகாந்த். இன்னொருவர் சத்யராஜ்!
இன்றைக்கோ... விஜயகாந்துக்கு சொந்தமான ஒரு டிவி சேனலே இயங்குகிறது. விஜய்காந்தின் பிரச்சாரம் மற்றும் சினிமா இரண்டுமாதான் இந்த சேனலின் ஆகாரம்!
சத்யராஜ் எப்போது பல்டியடிப்பார் என்றே தெரியாது. அத்தனை 'உறுதியான' மனிதர்! கால் மேல் கால் போட்டுக்கிட்டு சினிமாவை நக்கலடிக்கும் டிவிக்காரர்கள் ஒழியணும், டிவி சேனலை குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு இயங்க விடக்கூடாது என்றெல்லாம் மாற்றுத் திட்டங்கள் கொடுத்த இதே சத்யராஜ், இன்று சின்னத் திரையின் முழுநேர ஆர்ட்டிஸ்டாக மாறியுள்ளார்!
காரணம்... பெரிய திரையில் இனியும் அவரை ஹீரோவாகப் பார்க்க இயக்குநர்கள் விரும்பவில்லை. துணை நடிகர் என்ற புதுப்பதவி தன்னைத் துரத்துவதை நன்கு உணர்ந்து கொண்ட சத்யராஜ், முதல் கட்டமாக விளம்பரப் படங்களில் கவனம் செலுத்தினார். நல்ல வருமானம் (ஏற்கெனவே பெரும் பணக்காரர்தான் இவர்!).
இப்போது சின்னத்திரையில் முழுநேர நடிகராக மாறத் தயாராகிவிட்டார். முதல் கட்டமாக விஜய் டிவியில் வரும் 'ஹோம் ஸ்வீட் ஹோம்' என்ற நிகழ்ச்சியின் நடத்துநராக பொறுப்பேற்றுள்ளார். விரைவில் மெகா சீரியல்களிலும் வரப் போகிறாராம்!
ஓடமும் ஒருநாள்.....!


Click it and Unblock the Notifications











