மினிமம் கியாரண்டி ஹீரோ நான்! - பரத்

By Staff

Bharath with Poonam Bajwa
சேவல் படம் குறித்து பலவித விமர்சனங்கள் வருவது குறித்து நான் கவலைப்படவில்லை. காரணம் அந்தப் படம் நல்ல வசூலைக் கொடுத்திருக்கிறது. மக்களுக்குப் பிடிக்காவிட்டாவல் இந்த வசூல் கிடைக்குமா? என்று அப்படத்தின் நாயகன் பரத் கூறியுள்ளார்.

ஹரி இயக்கி, பரத், பூனம் பஜ்வா மற்றும் சிம்ரன் நடித்த படம் சேவல். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியானது.

படத்தின் ரிசல்ட் குறித்து நிருபர்களுக்கு நாயகன் பரத் அளித்த பேட்டி:

சேவல் படம் பற்றி பலவித விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனால் படம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. தியேட்டர் ரிப்போர்ட்டுகள் நல்லவிதமாக வருகின்றன. மினிமம் கியாரண்டி என்ற விதத்தில் தப்பு பண்ணாத படம் இது. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்ளில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் எனக்கு இன்னும் கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது தமிழ் சினிமாவில். இந்த மாதிரி பெரிய படங்களை என்னாலும் தாங்க முடியும் என நிரூபணமாகியிருக்கிறது. என்னை ஒரு மினிமம் கியாரண்டி ஹீரோ என நிலை நிறுத்தியிருக்கும் இயக்குநர் ஹரிக்கு நன்றி.

அடுத்தடுத்து என்னுடைய ஆக்ஷன் படங்கள் வரவுள்ளன. அவை அனைத்துமே விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய கமர்ஷியல் படங்கள். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஆறுமுகம் மற்றும் பேரரசு இயக்கத்தில் திருத்தணி இரண்டுமே ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்து படைக்கும். ஜப் வி மெட் ரீமேக் படம் ஒரு வித்தியாசமான முயற்சி. கண்ணன் இயக்கும் இந்தப் படம் இயல்பான கதையம்சம் கொண்டது, என்கிறார் பரத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X