'மேடி'க்குப் பிறந்த நாள்!

மாதவனுக்கு நேற்று பிறந்த நாள். பிறந்த நாளன்று காஷ்மீரில், பூட் சோல்ஜர் என்கிற இந்திப் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார் மாதவன்.
இதையடுத்து தனது குடும்பத்தினருடன் காஷ்மீரில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
தற்போது தமிழில் குரு என் ஆளு என்கிற காமெடிப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மாதவன். இந்த பிறந்த நாள் முதல் சீரியஸ் படங்களில் நடிப்பதை தற்காலிகமாக தள்ளிப் போட முடிவு செய்துள்ளாராம் மாதவன்.
மேலும் சில காலத்திற்குப் படத் தயாரிப்பையும் அவர் ஒத்திப் போட்டுள்ளார். எவனோ ஒருவன் கற்றுக் கொடுத்த பாடமாம் இது. இதுகுறித்து மாதவன் கூறுகையில், உண்மைதான். எவனோ ஒருவன் எனக்கு படத் தயாரிப்பு குறித்து நிறைய கற்றுக் கொடுத்து விட்டது. விநியோகத்தலும் எனக்கு பல அனுபவங்கள்.
இருப்பினும் எவனோ ஒருவன் படத்தை தயாரித்ததற்காக நான் வருத்தப்படவில்லை. இப்படிப்பட்ட படங்களை நான் பின்னர் தயாரிப்பேன். இப்போது எனது விநியோகஸ்தர்களுக்கு விரும்பியபடி நடித்துக் கொடுப்பேன் என்கிறார்.
தற்போது மாதவன் இந்தியில் 13பி (யாவரும் நலம் என்று தமிழில் உருவாகிறது), யா ஹைன் மும்பை மேரி ஜான், பூட் சோல்ஜர், தீன் பட்டி, 3 இடியட்ஸ் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் மாதவன்.
இதில் தீன் பட்டி படத்தில் அமிதாப்புடனும், 3 இடியட்ஸ் படத்தில் அமீர்கானுடம் இணைந்துள்ளார் மேடி.
நாட் பேட், மேடி!


Click it and Unblock the Notifications











