இன்னொரு வெற்றிக்கு ஜெயம் கூட்டணி தயார்!

தெலுங்கில் ஷாம் நடித்து வெற்றி பெற்ற 'கிக்' படத்தை தான் தமிழில் ரீமேக்குகிறார்கள்.
ஜெயம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் மற்றும் சந்தோஷ் சுப்பிரமணியம் வரிசையில் இந்தப் படத்தை தயாரிக்கிறார் எடிட்டர் மோகன், அவரது மூத்த மகன் இயக்குகிறார், இளைய மகன் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் காமெடிக்கு இணைகிறார் வடிவேலு. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நாயகி யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
தொடர்ந்து நான்கு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த கூட்டணியின் படம் என்பதால் இப்போதே எதிர்பார்ப்பு எகிறத் துவங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications











