கெட்டிமேளத்துக்கு ரவி ரெடி!

இன்றைய கோலிவுட்டின் எலிஜிபிள் பேச்சலர்களில் ஒருவர் ஜெயம் ரவி.
அவரது செட் நடிகர்கள் பலருக்கும் கல்யாணமாகி விட்டது. ஆனால் ரவி மட்டும் இன்னும் சிங்கிளாக இருக்கிறார். இதைச் சுட்டிக் காட்டி அவரது வீட்டினர் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனராம்.
தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கிசுகிசுவில் அடிபடாத நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். இதனால் அவருக்குப் பெண் கொடுக்க ஏகப்பட்ட பேர் அலை மோதுகிறார்களாம்.
இந்தநிலையில் அவருக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.
இதுகுறித்து ரவியிடம் கேட்டால், சிரித்தபடி, வீட்டில் பார்க்கும் பெண்ணைத்தான் மணந்து கொள்வேன். பெண் பார்ப்பது உண்மைதான். அதை மறைக்க விரும்பவில்லை. ஆனால் நிச்சயதார்த்தம் எல்லாம் இன்னும் ஆகவில்லை.
அப்பா, அம்மாவுக்குப் பிடித்த பெண்ணை மணப்பேன். இந்த வருடத்திலேயே கூட கல்யாணம் இருக்கலாம் என்கிறார்.
தற்போது பேராண்மை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. இதில் காட்டிலாக அதிகாரியாக வருகிறாராம். அடுத்து, அமீரின் கண்ணபிரான் படத்தில் நடிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











