twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோவாகும் கருணாநிதி பேரன்!

    By Staff
    |

    முதல்வர் கருணாநிதி குடும்பத்திலிருந்து இன்னொரு வாரிசு தமிழ் சினிமாவுக்குள் காலெடுத்து வைக்கிறார்.

    முதல்வர் கருணாநிதிக்கும், தமிழ் சினிமாவுக்கும் இடையிலான பந்தம் இன்று நேற்றல்ல, பல காலமாகவே பின்னிப் பிணைந்திருக்கும் ஒன்று.

    சமீப காலமாக முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் சினிமாவில் வலுவாக காலூண்றத் தொடங்கியுள்ளனர்.

    முதலில் சன் குழுமம் சன் பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்புப் பிரிவைத் தொடங்கியது. இதையடுத்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார்.

    இவரைத் தொடர்ந்து மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் தயாரிப்பில் குதித்தார்.

    இவர்களைத் தொடர்ந்து முதல்வரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி பாடகராக அவதாரம் எடுத்தார். கைவசம் நிறையப் படங்களுடன் பிசியாக இருக்கிறார் அறிவுநிதி.

    இந்த நிலையில் முதல்வரின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதியும் சினிமாவுக்குள் பிரவேசிக்கிறார். மற்றவர்களைப் போல கேமராவுக்குப் பின்னால் நிற்காமல் கேமரா முன்பு ஹீரோவாக நிற்கப் போகிறார் அருள்நிதி.

    பசங்க படத்தை இயக்கிய பாண்டிராஜ் அடுத்து இயக்கப் போகும் படத்தின் நாயகன் அருள்நிதிதான். இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது வேறு யாருமல்ல, அருள்நிதியின் தந்தையான தமிழரசேதான்.

    கருணாநிதி குடும்பத்திலிருந்து வரும் 3வது ஹீரோ இவர். ஏற்கனவே மு.க.முத்து சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் ஹீரோவாக நடித்துள்ளார். இப்போது அந்த வரிசையில் அருள்நிதியும் இணைகிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X