தமிழால் எங்களைக் குளிப்பாட்டும் கருணாநிதி! - கமல்ஹாஸன்

பெண்சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கமல்ஹாஸன் பேசியதாவது:
கலைஞரின் விழாக்களில் நான் கலந்துகொண்டு அவரை பாராட்டி பேசுவதை பற்றி, அவருக்கு பிடித்தவர்கள், 'எப்படி அவரிடம் கற்றுக்கொண்டீர்கள்?' என்று கேட்கிறார்கள். பிடிக்காதவர்கள், 'அவருக்கு எதற்கு சோப்பு போடுகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள்.
அவரை பற்றி பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். அதை, அரசியல் ஆக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரை, ஆசான் என சொல்வதை சோப்பு போடுவதாக நினைக்கக்கூடாது. அவர் தமிழால் எங்களை குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார். நாங்கள், அவருக்கு சோப்பு போட வேண்டியதில்லை.
கர்ச்சீப் போட்ட ராம நாராயணன்
கலைஞரின் 100-வது படத்தை இயக்கும் பொறுப்பு வேண்டும் என்று இப்போதே கர்சீப் போட்டுவிட்டார், ராம.நாராயணன்.
99-வது படத்தையாவது எனக்குக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 101-வது படத்துக்கு, இன்னொருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
எங்கள் ஆசை, அவருக்கு ஆயுள் கூடிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கலைஞர் சீராக தன்னையும், நாட்டையும் கவனித்துக் கொ ள்கிறார்...." என்றார் கமல்.


Click it and Unblock the Notifications











