பிரபாகரன் குறித்த படத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ்

வித்தியாசமான வேடங்களைத் தேடித் தேடி செய்யும் பிரகாஷ் ராஜ், பிரபாகரன் வேடத்தில் நடிப்பது தனது கேரியருக்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்கிறார்.
இந்த வேடத்துக்காக பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்களை தேடிப்பிடித்து பார்க்கிறாராம் பிரகாஷ்ராஜ்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை இன்னும் அவர் வெளியிடவில்லை. அவரே தனது டூயட் மூவீஸ் பேனரில் தயாரிப்பாரா என்பதையும் சொல்லவில்லை.
விரைவில் படம் குறித்த முழு விவரங்களைச் சொல்வதாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
ஏற்கனவே இலங்கை தொடர்புடைய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிங்களராக நடித்திருந்தார் பிரகாஷ் ராஜ் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











