ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன்-அமீர்

By Staff

Aamir and Sharukh
என் நாய்க்கு ஷாரூக் என்று பெயர் வைத்திருப்பது ஷாருக்கானின் குழந்தைகளைப் பாதித்திருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நான் ஷாரூக்கிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். அதேநேரம் இனி என் நாயை ஷாரூக் என்று அழைக்கவும் மாட்டேன்" என்று கூறியுள்ளார் அமீர்கான்.

பாலிவுட் முன்னணி நடிகர்களான அமீர்கான், ஷாருக்கானுக்கு இடையே பனிப்போர் நடந்துவருகிறது. அமீர்கான் சமீபத்தில் தன்னுடைய பிளாக்கில் எழுதும் போது, தன் வீட்டில் ஒரு நாய் இருப்பதாகவும், அதை ஷாரூக் என்று அழைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஷாருக் மீதான பொறாமை காரணமாகவே, அமீர்கான் இவ்வாறு எழுதியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், மும்பையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் இதுபற்றி பேசிய அமீர்கான், 'ஷாருக்கின் குழந்தைகள் என் பிளாக்கை கடந்த ஒரு வருடமாக படித்து வருகிறார்கள்.

நான் என்னுடைய நாய் குறித்து எழுதியது அவர்களை காயப்படுத்தி இருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஷாருக்கின் குழந்தைகளிடம்தான் மன்னிப்பு கேட்கிறேன். ஷாருக்கானிடம் அல்ல. எனெனில் ஷாருக்கிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லையே.

எனினும், நான் எனது நாயை இனி ஷாருக் என அழைக்கப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X