கரம் சிரம் புறம் ..சிபி

பஸ்ஸை முக்கிய கதாபாத்திரமாக்கி இயக்குகிறார் சாப்ளின். இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளவர் சிபிராஜ். நாயகி உள்ளிட்ட இதர கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறதாம்.
நிறையப் படங்களில் நடித்தும் கூட சிபிராஜுக்கு இன்னும் பிரேக் கிடைக்கவில்லை. லீ படம் அவருக்கு கொடுத்த லீடை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால், சிபி இன்னும் தேக்க நிலையில்தான் இருக்கிறார்.
இந்த நிலையில் கரம் சிரம் புறம் படத்தின் கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே இது எனக்கான கதை என்று சந்தோஷம் கொண்டாராம் சிபி.
கரம் - சிபிக்கு கரம் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments


Click it and Unblock the Notifications