வாய்ஸ் 'கட்'-பிரகாஷ் ராஜ் 'அப்செட்'!

By Sudha

Prakash Raj
சிங்கம் படத்தின் தெலுங்கு பதிப்பான யமுடு படத்தில் தனது கேரக்டருக்கு தனக்குப் பதில் இன்னொருவரை வைத்து டப்பிங் பேசி விட்டதால் கடுப்பாகியுள்ள பிரகாஷ் ராஜ் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா மீது தெலுங்கு நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் தான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் தானே டப்பிங் பேசுபவர். அவருக்கு தென்னிந்திய மொழிகள் அனைத்தும் (மலையாளம் தவிர) நன்கு தெரியும். எனவே அவரே அனைத்துப் படங்களிலு்ம் பேசி விடுவார். மேலும், சொந்தக் குரலில் பேசினால்தான் கேரக்டர் எடுபடும் என்ற கொள்கையிலும் உறுதியாக இருப்பவர் அவர்.

இந்த நிலையில் சிங்கம் படத்தின் தெலுங்குப் பதிப்பான யமுடுவில் பிரகாஷ் ராஜ் கேரக்டருக்கு யாரோ ஒருவரை வைத்து டப்பிங்கை முடித்துள்ளனர். இது பிரகாஷ் ராஜுக்கு பெரும் கோபத்தை கொடுத்து விட்டது. உடனடியாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தயாரிப்பாளருக்கும், தனக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறி தனக்குப் பதில் வேறு ஒருவரை வைத்து டப்பிங் கொடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தெலுங்குப் பதில் தன்னையே டப்பிங் பேச வைப்பதாக தயாரிப்பாளர் உறுதியளித்திருந்தார். ஆனால் அதை மீறி நடந்து கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X