twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரகாஷ் ராஜுக்குக் கிடைத்த 'மகள்'!

    By Staff
    |

    Trisha, Prakash Raj and Aishwarya
    அபியும் நானும் பார்க்க தியேட்டருக்குப் போன இடத்தில் அங்கு படம் பார்த்து விட்டு வந்த பெண் ரசிகை ஒருவர், பிரகாஷ் ராஜிடம் உங்களை அப்பா என்று சொல்லி வாஞ்சையுடன் அணைத்துக் கொள்ளவா என்று கேட்டு அவரை நெகிழ வைத்து விட்டாராம்.

    பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளது அபியும் நானும். திரிஷா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம், தந்தை - மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட படம்.

    படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் பிரகாஷ் ராஜை நெகிழ வைத்த ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    சென்னை மாயாஜாலில் அபியும் நானும் படத்திற்கு எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதை நேரில் பார்க்கப் போயிருந்தார் பிரகாஷ் ராஜ்.

    படத்திற்கு நல்ல கூட்டம். படத்தைப் பார்த்து விட்டு பிரகாஷ் நிறைவுடன் வந்தபோது ஒரு இளம் பெண் பிரகாஷ் ராஜிடம் ஓடி வந்தார்.

    சார், உங்களை கட்டிப் பிடித்து அப்பான்னு ஒரு முறை சொல்லிக்கட்டுமா என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டதும் அப்படியே நெகிழ்ந்து போய் விட்டாராம் பிரகாஷ் ராஜ்.

    எனது படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இதைக் கருதுகிறேன் என தனது நண்பர்களிடம் சொல்லி மகிழ்கிறாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X