விஜய் படம்... கைவிட்டது 'ஏஸ்கர்'?

விஜய்க்கு பெரும் திருப்புமுனை தந்த காதலுக்கு மரியாதை படத்தை ஒரிஜினலாக தயாரித்தவர் சங்கிலி முருகன். ஒரு கட்டத்தில் படத்தின் மீது நம்பிக்கை இழந்த சங்கிலி, படத்தை ஏஸ்கர் பிலிம்ஸுக்கு கைமாற்றி விட்டாராம், சுமாரான லாபத்துக்கு.
அதுதான் ஏஸ்கர் தயாரிப்பில் வந்த முதல் படமாக ஆனது.
இப்போது மீண்டும் விஜய் நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் திட்டத்திலிருந்தாராம் ஏஸ்கர் நிறுவன உரிமையாளர். ஆனால் இந்த நேரம் பார்த்து விஜய் நாளும் அரசியல் குட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து, இருக்கிற பேனர் பெயரையும் தொலைத்துக் கொள்ளாமலிருக்க வேண்டுமே என்ற எச்சரிக்கை உணர்வில் படத்தைக் கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
காங்கிரஸில் சேரும் முன்பே முதல் போணி இப்படி இருக்கிறதே என நொந்துபோய்விட்டாராம் நடிகர்!
Comments


Click it and Unblock the Notifications