ஆல்ப்ஸுக்குப் பறக்கும் அஜீத்!

By Staff

Ajith with Nayanthara
ஏகன் படத்தின் கடைசி பாடலை ஷூட் செய்ய கவர்ச்சி நாயகி நயனதாராவுடன் சுவிட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைக்குப் பறக்கிறார் அஜீத்.

அய்ங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் தமிழ்ப் படமான ஏகன் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல் மட்டுமே 'சுட' வேண்டியுள்ளது.

இதனை ஒரு வாரத்துக்குள் முடித்துவிடத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ராஜூ சுந்தரம். முதலில் இந்தப் பாடலை சென்னைக்கு அருகில் எடுக்கத் திட்டமிட்டிருந்த ராஜூ சுந்தரம், பின்னர் லொக்கேஷனை அப்படியே சுவிட்ஸர்லாந்துக்கு மாற்றிவிட்டார்.

யுவன் போட்டுக் கொடுத்திருக்கும் இந்த இனிய காதல் மெட்டுக்கு ராஜூ சுந்தரமே நடனம் அமைக்கிறாராம். இதற்காக நாயகி நயனதாராவுக்கு படு கவச்சியான காஸ்ட்யூம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஷாரூக்கானின் பம்பர் ஹிட் படமான மெய்ன் ஹூன் நா வின் ரீமேக்கான இந்தப் படமும் பிரமாண்ட வெற்றியைப் பெற வேண்டும் என்ற வெறியுடன் உழைதேதுக் கொண்டிருக்கிறது ஏகன் யூனிட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X