சுந்தர்.சி. கையில் 7!

இயக்குநராக மட்டுமே உலா வந்து கொண்டிருந்த கொங்கு தங்கம் சுந்தர்.சி. தலைநகரம் மூலம் திடீரென ஹீரோவானார். என்ன பண்ணப் போகிறார் என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், தலைநகரம் மூலம் பரபரப்பான ஹீரோவாக வெற்றி பெற்று அசத்தினார்.
இதையடுத்து வீராப்பு அவருக்கு இன்னும் ஒரு சக்ஸஸைக் கொடுத்தது. இப்போது சண்டை மூலம் ஹாட்ரிக் அடித்து விட்டார் சுந்தர்.சி.
தலைவர் கையில் இப்போது 7 படங்கள் இருக்கிறதாம். எல்லாமே ஆக்ஷன் படங்கள்தானாம். என்னால் அவார்டு படங்களில் நடிக்க முடியாது. தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் வகையிலான படத்தில் மட்டுமே நடிப்பேன். அதற்கு ஆக்ஷன் படங்கள்தான் பொருத்தமானது என்கிறார் சுந்தர்.சி.
சுந்தர்.சியின் மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால், அவருக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏக டிமாண்ட் கிளம்பியுள்ளது. இதனால் சண்டை படத்தைத் தயாரித்து இயக்கிய ஷக்தி சிதம்பரம் தயாரிப்பில் சுந்தர்.சி மீண்டும் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடி நமீதா.
தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம் சுந்தர்.சி. கொஞ்ச காலத்திற்கு டைரக்ஷன் பக்கம் திரும்பப் போவதில்லையாம்.
இந்த ஆண்டு சுந்தர்.சி. நடித்துள்ள குஷ்புவின் சொந்தப் படம், பெருமாள், தீ ஆகியவை வெளியாகவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











